பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
537

மான ஒப்பனை வாய்ந்த விருதுப் பதக்கம்

round measurements: (உலோ,) வட்ட அளவீடுகள்: ஒரு பொருளின் விட்டம், ஆரம் போன்றவற்றின் அளவீடுகள்

round nose tool: (எந்.) வட்ட முனைக் கருவி: சொர சொரப்பான பகுதிகளை வெட்டி நீக்குவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கருவி

round-point chisel: (எந்.) வட்ட நுனி உளி: எண்ணெய் வரிப் பள்ளங்களை வெட்டுவதற்குப் பயன்படும் வட்ட நுனி கொண்ட சிற்றுளி

round-tube radiator: (தானி.) வட்டக்குழாய்க் கதிர்வீசி: சேமக்கலத்தின் மேற்புறத்திலிருந்து கீழ்ப்பகுதிக்குச் செல்லும் வகையில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்ட வட்ட வடிவக் குழாய்கள் பயன்படுத்தப்படும் வெப்பம் கதிர் வீசி. வரிசையாக அமைந்த மென் தகடுகள் வழியே இந்தக் குழாய்கள் செல்லும் போதும் அவற்றில் ஆவிக் கசிவு ஏற்பட்டு, குளிர்விக்கும் அமைப்பில் உண்டாகும் வெப்பம் முழுமையான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறது

Roving: (குழை.) முதிரா இழை: இழுத்துச் சற்றே முறுக்கப்படும் பஞ்சு, கம்பளம் முதலியவற்றின் சிம்பு

Rowland's law:(மின்.) ரோலண்ட் விதி: காந்தச் சுற்று வழிகளுக்கான ஒரு விதி. காந்தப் பாய்வின் கோடுகளின் எண்ணிக்கையானது மின்காந்த இயக்க விசைக்கு நேர் விகிதத்திலும் மின்சுற்று வழியின் காந்தத் தடைக்கு தலைகீழ்வீதத்திலும் இருக்கும் என்பது இந்த விதி

rowlock: (க.க.) உகை மிண்டு: படகுத் துடுப்பு உகைப் பாதாரமான அமைவு

royal: எழுது தாள்: எழுதுவதற்கான 24" x 19" அளவுள்ள தாள்

royal drawing paper: பட வரைவுத் தாள்: படம் வரைவதற்கான 61 x 48 செ.மீ. அளவுள்ள தாள்

rubber :(வேதி.) ரப்பர்: சில வெப்ப மண்டல மரங்களின் பால் போன்ற சாற்றிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன். இது மிகுந்த நெகிழ்திறன் உள்ளது. நீரும் வாயுக்களும் இதில் உட்புகா. எனவே, இது தொழில் துறையில் மிகுதியாகப் பயன்படுகிறது. உந்து ஊர்திகளுக்கான டயர்கள், நீர்காப்பு, மின்காப்பு ஆகியவற்றுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது

rubber cement: ரப்பர் சிமென்ட் : பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு முறைகளில் ரப்பர் சிமென்ட் செய்யப்படுகிறது. கச்சா ரப்பரை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கரைப்பானைச் சேர்ப்பதன் மூலம் சாதாரண ரப்பர் சிமென்ட் செய்யப்படுகிறது. கரைப்பானாகப் பயன்படுத்த கார்பன் டை சல்பைடு மிகச் சிறந்தது. பென்சால் நல்லது; மிகவும் மலிவானது; கேசோலினும் கரைப்பானாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

rubble: (க.க.) கட்டுமானக் கல்: கொத்தாத கட்டுமானக் கல்

rubble masonry: (க.க.) கற்கட்டுமான வேலை: கொத்தாத கட்டுமானக் கல் கொண்டு அடித்தளம் அமைதல் போன்ற நயமற்ற கட்டிட வேலை செய்தல்

rubidium: ருபீடியம்  :மென்மையான வெள்ளீய உலோகத் தனிமம்