பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

538

rubrication : (க.க.) பின்புல வண்ணப்பூச்சு : இனாமல் அல்லது வண்ணப்பூச்சு மூலம் ஒரு பின் புலத்திற்கு வண்ணம் பூசுதல்

rub stone : சாணைக்கல்: சாணை பிடிப்பதற்குப் பயன்படும் கல்

ruby: கெம்புக்கல்: ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம் வரை உள்ள மணிக்கல் வகை

rudder: (வானூ.) சுக்கான்: விமானம் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்துவதற்காக விமானத்தின் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு

rudder angle: (வானூ.) சுக்கான் கோணம் : விமானத்தின் சுக்கானுக்கும் அதன் சமதள ஒரு சீர்மைக்குமிடையிலான கூர்ங்கோணம்

rudder pedals: (வானூ.) சுக்கான் மிதிகட்டை: சுக்கானைக் கட்டுப்படுத்தி இயக்குவதற்கான மிதி கட்டைகள்

rudder torque: (வானூ.) சுக்கான் முறுக்கம்: விமானத்தின் மீது சுக்கான் மூலம் செலுத்தப்படும் திரிபு முறுக்கம்

rule: (அச்சு.) இடைவரித் தகடு: அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக்கோடு

ruling machine: (அச்சு.) வரியிடு பொறி: அச்சுக்கலையில் தாளில் இணைவரிகள் இடுவதற்கான கருவி

rumen: (வில.) தீனிப்பை: அசை போடும் விலங்கின் முதல் இரைப்பை

rung (wood turns): குறுக்குக் கம்பி : குறுக்கு ஆரவரிப் பட்டிகை, ஏணிப்படி

runic: (அச்சு.) அணிவரி அச்சுரு:பண்டைய ஜெர்மானிய இன வரிவடிவ எழுத்துப் பாணியில் அமைந்த அணிவரி அச்சுரு

runner (குழை.) வார்ப்புப் புழை: உலோக வார்ப்புச் சட்ட வார்ப்புப் புழை

running head: (அச்சு.) தொடர் தலைப்பு: ஒரு நூலில் பக்கந் தோறும் திரும்பத் திரும்பத் தொடர்ந்து வரும் தலைப்பு

runway: (வானூ.) ஓடுபாதை: விமான நிலையத்திலுள்ள எல்லாப் பருவ நிலைகளிலும் ஏறி இறங்குவதற்கான ஓடுபாதை

runway localizing beacon: (வானூ.) ஓடுபாதை ஒளிவிளக்கு: விமான நிலையத்தில் ஓடுபாதை நெடுகிலும் அல்லது தரையிறங்கு தளத்தில் அதற்குச் சற்றுத் தொலைவிலும் பக்கவாட்டிலும் ஒளி பாய்ச்சி வழிகாட்டுவதற்கான சிறிய ஒளி விளக்கு

rupture: குடற்சரிவு : குடற்சரிவினால் உண்டாகும் கோளாறு

rupture member: (குளி.பத.) முறிவு உறுப்பு: முன்னரே தீர்மானிக்கப்பட்ட அழுத்தத்தை எட்டியதும் தானாகவே முறிந்துவிடக் கூடிய ஒரு சாதனம்

rush: நாணற்புல்: நாற்காலிக்கு அடியிடுவதற்குப் பண்டைக்காலம் முதல் பயன்படும் பிரம்பு வகை நாணற்புல்லின் தண்டு

rust: (வேதி.) இரும்புத்துரு: நீருடன் இணைந்த அய ஆக்சைடு

rustication: (க.க.) மேற்பரப்பு அளி: கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடு முரடான மேற்பரப்பு அளி