பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
541

வைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 2345 என்ற எண், 3% நிக்கல், 0.45% கார்பன் கொண்ட நிக்கல் எஃகினைக் குறிக்கும்

safe carrying capacity : (க.க) காப்புச்சுமைத் திறனளவு: எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புகம்பிகளுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும், மின் கடத்திகளைப் பொருத்தும் போது இந்தத் திறனவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

safe edge: (பட்.)காப்பு முனை: ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும்போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது

safe load: (பொறி.) காப்புப் பாரம் : எந்திரத்தில் செயற்படும் அழுத்தத்திற்கு மேற்படாத வகையில் ஒரு பகுதி தாங்கிக்கொள்ளக்கூடிய பாரத்தின் அளவு

safety factors: (பொறி.) காப்புறுதிக் காரணிகள்: எதிர்பாராத சூழ் நிலைகளில் எந்திரங்களில் பாரம் சற்று அதிகமாகிவிட்டால், அதைத் தாங்கிக்கொள்ளும் வகையில் காப்புறுதியாக அமைக்கப்படும் காரணிகள்

safety lamp:(கனி.) காப்பு விளக்கு : சுரங்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் எளிதில் தீப்பற்றாத விளக்கு

safety paper: (அச்சு.)இணை காப்புத் தாள்: பொருளகக் காசு முறிக்குரிய போலி செய்ய முடியாத தாள்வகை

safety switch: (மின்.) காப்பு விசை: ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து, வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கத்தி முனை மின்விசை

safety valve : (பொறி.) காப்பு ஒரதர் : கொதிகலனில் அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு

sag : புடை சாய்வு : பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ்ந்து தாழ்வுறுதல். காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் தன்மை

sagger : சூளைக்களிமண் உறை : நுட்பமான களிமண் பொருள்களைச் சூளையில் சுடும் போது அவற்றை வைப்பதற்கான களி மண உறை

sal ammoniac : (வேதி. ) நவச்சாரம்: அம்மோனியம் குளோரைடு (NH4CL) வாயு உற்பத்தியில் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. பற்ற வைத்தல், சாயப்பொருட்கள் உற்பத்தி,காலிக்கோ, அச்சு முதலியவற்றில் உருகு பொருளாகப் பயன்படுகிறது

salon : (க.க.) வரவேற்பு அறை: வரவேற்புகள் நடத்தவும் காட்சிப் பொருள்களை வைப்பதற்கும் பயன்படும் ஒரு பெரிய அறை

salt soda : (வேதி.) சலவைச் சோடா : கண்ணாடி தயாரிப்பு. சோப்பு உற்பத்தி, துணிகளைச் சலவை செய்தல், சாயமிடுதல், காகித உற்பத்தி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சலவை சோடா

salt : (வேதி.) உப்பு : ஓர் உப்பு மூலத்தினால் ஒர் அமிலத்தைக் காடி-காரச் செயல்கள் இரண்டு மற்றதாகச் செய்யும் போது உண்டாகும் ஒரு பொருள் உலோகத்