பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
555

shackle:(எந்.) சங்கிலிக் கொளுவி: ஓரளவு இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடிய சங்கிலிப் பூட்டுக் கொளுவி

கொளுவி(படம்)

shackle bolt: (எந்.) முளையில்லாக் கொண்டி: முளையில்லாது மாட்டும் தாழ்

shade: நிறத் திண்மை : வண்ணங்களில் செறிவான அல்லது மங்கலான வண்ணப் படிநிலை

shadow mask : (மின்.) நிழல் திரை : வண்ணத் தொலைக் காட்சியின் படக்குழலில் பொருத்தமான வண்ணத்தைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் துளைகளிட்ட உலோகத் தகடு. இது எலெக்ட்ரான் பீற்று விசைக்கும் பாஸ்போர் திரைக்கும் நடுவில் வைக்கப்படுகிறது. நுண்ணாய்வின் போது எந்தக் கணத்திலும் பொருத்தமான பாஸ்போர் புள்ளிகள் மட்டுமே கிளர்ச்சியடையுமாறு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்

shaft : (எந்.) சுழல் தண்டு : எந்திரங்களில் சுழலும் உறுப்புகளுக்கு ஆதாரமுள்ள சுழல்தண்டு

shake : மரவெடிப்பு : வெட்டு மரத்திலுள்ள ஒரு வெடிப்பு அல்லது முறிவு. இது மரத்தில் ஆண்டு வளையங்களுக்கிடையே ஒரு பிளவை உண்டாக்குகின்றன

shakes : (க.க.) அரை ஆப்பு : கையினால் செய்த அரை ஆப்பு

shank : (எந்.) எந்திரத் தண்டு : ஒரு கருவியை அதன் கைப்பிடியுடன் அல்லது குதை குழியுடன் இணைக்கும் உறுப்பு. கருவியின் வெட்டிடைப்பகுதி

shaper : (எந்.) வார்ப்புப் பொறி : உலோகங்களுக்கு உருவங்கொடுக்கும் கடைசல் வார்ப்புப் பொறி

shapes: (பொறி.) உலோக உருவப் படிவம்: உலோகத்தில் செய்யப்படும் பொருட்களின் உருமாதிரிப் படிவம்

sharp sand : (க.க.) கூர்மணல் : கூர்மையான கோணங்களையுடைய தூய்மையான மணல்

shatter-proof glass : (தானி.) உடையாத கண்ணாடி : அதிர்ச்சியைத் தாங்கி உடையாமலிருக்கும் ஒருவகைக் கண்ணாடி. இது இப்போது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிர்ச்சியைத் தடுப்பதற்காக நடுவில் பிளாஸ்டிக் தகட்டினைக் கொண்ட இரு கண்ணாடித் துண்டுகளினாலானது

shear : (பொறி.) தடைவிசை : இரு நேரிணையான விசைகள் எதிர்த்திசைகளில் இயங்குவதன் மூலம் ஒரு பொருள் வெட்டப்படுவதை எதிர்க்கும் தடைவிசை. கத்திரி- கத்திரி மூலம் வெட்டுதல். சறுக்குப் பெயர்ச்சி- அழுத்தங்காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி

shears : உலோகக் கத்திரி: உலோகங்களைக் கத்திரிப்பதற்குப் பயன்படும் கருவி

கத்திரி(படம்)

shears : (எந்.) கம்பளிக் கத்திரி : கம்பளி மயிர் வெட்டுவதற்கான கத்திரிக்கோல், தழை வெட்டு கருவி

shear-steel : (உலோ.) கத்தரி எஃகு : கத்திரிக்கோல் செய்வதற்கான எஃகு