பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
589

மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக் கட்டுமானச் சட்டம்

steel pulley: (எந்) எஃகுக் கப்பி: எஃகினாலான கப்பித் தொகுதி. எடை குறைவாக இருப்பதற்காகவும், எளிதாக இயக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது

steel rule: (எந்) : எஃகு வரை கோல்: நெகிழ்திறனுடைய அல்லது விறைப்பான எஃகுவரை கோல். இதில் பல்வேறு ஆள்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் அங்குலங் களிலும், அங்குலங்களின் பின்னங்களிலும் அமைந்திருக்கும்

steel square: எஃகுச் செங்கோண அளவி: எந்திர நுட்பப் பணியாளர்கள் பயன்படுத்தும் எஃகினாலான மூலை நுட்பப் பலகை

steel wool: (பட்) sr: எஃகு இழை: பாய் போல் முடையப்பட்ட நுண்ணிய எஃகு இழைகள். இது மர அல்லது உலோகப் பரப்புகளை பளபளப்பாக்குவதற்குப் பயன்படுகிறது

steelyard: தராசுப்பொறி: எடை பார்ப்பதற்குப் பயன்படும் ஒரு வகைத் தராசுப்பொறி. இதில் சமமற்ற நீளமுடைய இரு கரங்கள் ஒரு நீண்ட நெம்புகோலுடன் இணைக்கப்பட்டிருக்கும்

steeple: (க.க.) ஊசிக்கோபுரம்: தேவாலயங்களில் உள்ளது போன்ற கூம்பு வடிவக் கோபுரக் கூம்பு

steeple jack: பவர்: தூபி பழுதுபார்ப்பவர். தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர்

steering column: இயக்குத் தூண் :உந்துகல இயக்காழி பொருத்தப்பட்டிருக்கும் தூண் அல்லது கம்பம். இது வழிச்செலுத்து இயக்கத்தை முன் சக்கரங்களுக்குக் கொண்டு செல்லும் பல்வேறு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்

steering gear: (தானி.எந்.) இயக்கு பல்லிணை: உந்துகல இயக்காழியை இருசுடன் இணைக்கும் உறுப்புகளின் தொகுதி அனைத் தையும் இது குறிக்கும். இதன் மூலமாகவே உந்து ஊர்தியைச் செலுத்த முடிகிறது

steering wheel: (தானி.எந்) உந்துகல இயக்காழி: உந்து ஊர்தியின் முன் சக்கரங்களுடன் பல்வேறு பல்லிணைகள், நெம்பு கோல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள கையினால் இயக்கக்கூடிய சக்கரம். இதன் மூலமாகவே உந்து ஊர்தியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது

stellite; (பொறி.) ஸ்டெல்லைட்: குரோமியத்தையும், கோபால்டையும் பெருமளவிலும், சிறிதளவு மாலிப்டினத்தை அல்லது டங்ஸ்டைனையும் கொண்ட ஒருவகை உலோகக் கலவை. இது கருவிகளும், வெட்டுக் கருவிகளும் தயாரிக்கப் பயன்படுகிறது. இதனை வார்ப்படமாகச் செய்யலாம். ஆனால், காய்ச்சி அடித்து உருவாக்க இயலாது. இதனை அராவித் தீட்டலாம்

stencil: படியெடு தாள்: எழுத்துக்களை அல்லது ஒப்பனை உருக்களை உள்வெட்டுத் தகட்டுப் படியெடுத்துப் படியெடுப்பதற்கான உலோகம் அல்லது பிற பொருள்களினாலான மெல்லிய தகடு

stepdown: (மின்) இறங்குமுக மின்னழுத்தம்: ஓர் இறங்குமுக மின்மாற்றியில் உள்ளது போன்று அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்திற்குக் குறைதல்