பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

608

tamping: (பொறி.) கெட்டித்தல்: சிறு கற்கள் போன்ற பொருள்களைப் பதித்து அடித்து கெட்டித்தல். ஒரு மாதிரிப் பாணியைச் சுற்றி மண்ணை வைத்துத் தட்டுதல்

tampion :(கம்.) கூம்பு அடைப்பான்: ஓர் ஈயக்குழாயின் வாய் முகப்பை அடைப்பதற்கான கூம்பு வடிவ மரக் கட்டை அடைப்பான்

tambark: பதனிடு பட்டை: ஒக் மரத்தின் பட்டை போன்று டானின் அடங்கிய மரத்தின் பட்டை. தோல் பதனிடப் பயன்படுத்திய பின்னர் ஓரளவில் எரிபொருளாகப் பயன்படுவது

tandem airplane: (வானூ.) அடுக்கு இறக்கை விமானம்: ஒரே மட்டத்தில் முன்னும் பின்னுமாக அமைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறக்கைகளைக் கொண்ட விமானம்

tang :முனை விளிம்பு: ஒரு வெட்டுக் கருவியின் கழுத்து அல்லது பிடிக்குள்ளாக செருகப்படும் பகுதி

tangent தொடுகோடு: குறுக்காத வெட்டிச் செல்லாமல் ஒரு கோட்டை அல்லது பரப்பை ஒரு புள்ளியில் தொடுதல்-தொடுகோடு

tangent of an angle: (கணி) இருக்கை: ஒரு கோணத்துக்கு எதிரே உள்ள பக்கத்தை அருகில் உள்ள பக்கத்தால் வகுத்து வரும் ஈவு

tangible: தொட்டுணரத்தக்க: தெளிவாக உணர முடிகிற, உண்மையான

tank. (தானி.எந்.) தொட்டி: மோட்டார் வாகனம் ஒன்றில் பெட்ரோல் நிரப்பப்படும் தொட்டி

tannin or tannic acid: (வேதி) டானின் அல்லது டானிக் அமிலம்: பளபளப்பான சற்று மங்கலான மஞ்சள் ஒழுங்கற்ற பொடி (C14H1009) கால்நட், சுமாக், தேயிலை போன்றவற்றிலிருந்து பழுப்பான வெள்ளைப் பளபளப் புள்ள செதில் போன்ற வடிவில் கிடைப்பது, மருத்துவத்தில் இது உடல் திசுக்களை சுருங்க வைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

tantalum: (உலோ.) டாண்டாலம் (வெம்மம்): வெப்பத்தினாலும், திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாது வெள்ளை உலோகத் தனிமம், இது 'டாண்டாலைட்' என்றும் தாதுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இது பளபளப்பானது ; இதனைக் கம்பியாக நீட்டலாம். மின்விளக்குக் குமிழ்களிலும், வானொலிக் குழல்களிலும் இழைகளாக மிகுதியும் பயன்படுகிறது. இது கம்பியாகவும் சலாகையாகவும் விற்பனை செய்யப்படுகிறது

tantanium: (உலோ.) டான்டானியம்: டேன்டலைட்டிலிருந்து பெறப்படுகிற, அமிலத்தை எதிர்க்கும் தன்மையுள்ள, கம்பியாக இருக்கத்தக்க பளப்பளப்பான வெள்ளை நிற உலோகம். பெரிதும் மின் பல்புகளிலும் ரேடியோ குழல்களிலும் இழையாகப் பயன்படுவது, கம்பியாக, தண்டாக விற்கப்படுவது

tap: புரியாணி உள்வரி இழைப்புக் கருவி; புரியிடுதல்: புரிதண்டு கொண்டு புரிகளை அமைத்தல்.(எந்.) உள்ளிடைப் புரிகளை அமைப்பதற்கான புடைத்த புரிகளைக் கொண்ட கருவி, (கியர் வரை) ஒரு துளை