பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
617

செயற்கைக் கருவூட்டுமுறை மூலம் பிறந்த குழந்தை

tetany : (நோயி..) முறை ஈரப்பிசிவு நோய் : உடலின் ஒரு சிறு பகுதியில், அதாவது, கைகள், பாதம், குரல்வளை போன்றவற்றில், இரத்தத்தில் கால்சிய அயனிகள் (அயனி யாக்கிய கால்சியம்) இல்லாததன் காரணமாகத் தசைகள் சுருங்கி விடுவதால் உண்டாகும் நோய்

tetraethyl lead : (வேதி) டெட்ரா எத்தில் காரீயம் : நச்சுத்தன்மையுள்ள எளிதில் ஆவியாகிற திரவம். என்ஜினில் கோட்டி இலக்கத்தைக் குறைப்பதற்கும் பெட்ரோலுடன் சிறிதளவு சேர்க்கப்படுவது

tetrode : (மின்.) நான் முனையம் : எதிர்முனை, தகட்டுக் கட்டுப் பாட்டுவலை, திரைவலை உட்பட நான்கு முனையங்களையுடைய ஒர் எலெக்ட்ரான் குழல்

tetrode transistor : (மின்) நான் முனைய மின் பெருக்கி: நான் மின் முனையங்களைக் கொண்ட ஒரு மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்)

text : (அச்சு.) வாசகம் : ஒரு நூலில் அல்லது அச்சிடப்பட்ட வேறு ஏதேனும் ஒன்றில் அடங்கிய வாசகம்

taxt type : (அச்சு.) வாசக எழுத்து அலகு வகை : அச்சிடப்பட்ட எழுத்துக்களின் வடிவளவைக் குறிக்கின்ற அலகு

thawing : (குளி.பத.) உருகியக்கம் : பனிக்கட்டியைக் கூடுதலாக வெப்பமூட்டுதல் மூலம் உருகி நீராக மாற்றுதல்

T-head engine : (தானி) T தலை என்ஜின்: T என்னும் எழுத்து போன்ற வடிவமைப்பு கொண்ட மோட்டார் பிளாக்கின் குறுக்கு வெட்டுப் பகுதி வால்வுகள் என்ஜினில் இரு புறங்களிலும் அமைந்திருக்கும்.எனவே ஒரு கேம் ஷாப்டுகள் இரு கேம் ஷாப்ட் டிரைவ் கீர்கள் தேவை. விலையுயர்ந்த கட்டுமானம்.

theorem : தேற்றம்: எண்பிக்கத் தக்க ஓர் உண்மை நிரூபிக்கப்பட வேண்டிய ஒரு கூற்று

theoretical : கொள்கையளவில்: ஒரு கருத்துக் கோட்பாடு தொடர்பான அல்லது அளவுச் சார்ந்தன; அனுமான; கற்பிதமான

theory : கோட்பாடு : ஒன்றுக் கொன்று மிக நெருங்கிய தொட்ர் புள்ள கவனிப்புகள் அல்லது தோற்றங்கள் பலவற்றை விளக்கும் முயற்சி

therapeutic : (நோய்) நோய் நீக்க வியல் ; நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலை

therlo : (உலோ.) தெர்லோ : தாமிரம், அலுமினியம், மாங்கனிஸ் ஆகியவை அடங்கிய கலோகம்

thermal agitation : (மின்.) வெப்பக் கிளர்ச்சி : ஒரு மின்சுற்று வழியில் எலெக்ட்ரான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசைவதால் உண்டாகும் ஓசை

thermal conductivity : (பற்.) வெப்பக் கடத்து திறன்: (பற்ற வைப்பு) ஓர் உலோகப் பொருளின் வழியே வெப்பத்தைக் கடத்துவதில் அந்த உலோகத்துக்கு உள்ள திறன். அந்த உலோகம் எவ்வளவு வேகத்தில் வெப்பத்தைக் கடத்துகிறது என்பதைத் தீர்மானிப்பதில், வெப்பம் பெறு வதற்கு முந்தைய நிலை. தேர்ந்தெடுக்கப் பட்ட வெப்ப ஊது குழல் அளவு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்