பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61

Atomic bomb : அணுகுண்டு: இது ஒரு வெடிக்கும் சாதனம். யுரேனியம் 235 அல்லது புளுட்டோனியத்தின் அணுக்களின் மையக்கரு சிதைவுறுவதன் மூலம் அந்தப் பொருள் எரியாற்றலாக மாறுகிறது. இது முதன்முதலில் 1945இல் நியூ மெக்சிக்கோவில் பயன்படுத்தப்பட்டது

atomic clock: (விண்) இயக்கக் கடிகாரம் : இது மிகத் துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரம். இது ஒரு மின்னியல் அலைப்பி மூலம் இயக்கப்படுகிறது. ஓர் அணுவியல் அமைப்பின் இயற்கையான அதிர்வு அலைவெண் மூலம் முறைப்படுத்தப்படுகிறது

atomic energy : அணு ஆற்றல்: பார்க்க: அணுவியல் ஆற்றல்

atomic hydrogen welding : (பற்). அணு ஹைட்ரஜன் பற்ற வைப்பு: இது ஒரு மாற்று மின்னோட்ட மின் சுடர் பற்ற வைப்பு முறை. இதில் ஒரு ஹைட்ரஜன் சூழலிலுள்ள இரு மின் முனைகளுக்கிடையிலுள்ள ஒரு மின் சுடரிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது

atomic number : (வேதி) அணு எண்: ஓர் அணுவில் உள்ள கோளக எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை

atomic theory : (வேதி) அணுக்கொள்கை : அனைத்துப் பொருள்களும் நுண்ணிய அணுக்கள் என்னும் உள்ளணுத் துகள்களாலானவை என்னும் கொள்கை

atomic weight : (வேதி) அணு எடை : மற்றொரு தனிமத்தைத் தர அளவுத் திட்டமாகக் கொண்டு ஒப்பிடும்போது ஒரு தனிமத்திலுள்ள அணுவின் எடை. பொதுவாக அந்த மற்றொரு தனிமம், ஹைட்ரஜனாக இருக்கும்; அதன் அணு எடை 1

atomization : (தானி) அணுவாக்குதல்: நீர்மங்களை நுண் திவலைகளாக மாற்றுதல்

atomize : (குளி) அணுக்களாகக் குறை : நீர்மம் எதனையும் புகை அல்லது தூசு போன்று தோன்று மாறு நுண் திவலைகளாக்குதல்

atomizer : அணுவாக்கக் கருவி : நீர்மங்களை நுண் திவலைகளாக்கும் ஒரு கருவி

atrium : (க.க.) வாயில் முகப்பு : திருக்கோயில் மேடிட்ட வாயில் முகப்பு

attachment : (எந்) இணைப்புக் கருவி: ஓர் எந்திரத்தின் செயல் திறனை அல்லது செயல் தரத்தை மேம்படுத்துவத்ற்கு அதனுடன் இணைத்துக் கொள்ளத்தக்க ஒரு சாதனம்

attachment plug : (மின்) இணைப்பு முனை : நெகிழ் திறமுடைய ஒரு கட்டிழையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய முனை இதனைக் குதை குழியில் ஆதாரப் பலகையில் பொருத்தி ஒரு சாதனத்தில் மின்னோட்டம் பாயுமாறு செய்யலாம்

attenuation : (மின்) செறிவுக் குறைவு : செறிவு வீச்சு குறைதல்

attenuator : (மின்) . செறிவுக் குறைப்பான் :மின்அழுத்தம், மின் விசை அளவு, மின்னோட்டம் ஆகியவற்றின் செறிவினை வேண் டிய அளவுக்குக் குறைப்பதற்குப் பயன்படும் தடைகளின் தொகுதி

attic : (க.க.) மேன்மாடச் சிற்றறை: இக்காலத்துக் கட்டுமானங்களில்