பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60

astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும் அறிவியல்

astrophysics (இயற்) வான்கோளவியல்; வான்கோளங்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயும் அறிவியல், விண்மீன் களின் இயல்பு, அவற்றின் வேதியியல் தனிமங்கள், வெப்பநிலை, ஒளியாற்றல் முதலியவற்றை ஆராய்தல்

asymmetrical : (மின்) பன்மடி அதிர்ப்பி:ஏற்றத்தாழ்வான மின் கடத்திக் கால அளவுகள் காரணமாக ஒவ்வொரு குழலிலிருந்தும் சமமில்லாத அலைகளை உண்டாக்கும் பன்மடி அதிர்ப்பி

asymptote :(கணி.) தொடர் வரை: வளைகோட்டுடன் இணையாது அணுகிக் கொண்டே செல்லும் நேர்க் கோடு

asynchronous : (மின்.) கால இசை வின்மை :ஒரே அலைவெண் கொண்டிராமல்,இசைவு ஒவ்வாக் காலப் பண்பளவுடைய நிகழ்வு

atheroma : (நோயி) தமனி வீக்கம்: தமனிகளின் உட்படலம் தடித்தும் வீங்கியும் இருத்தல்

athlete's foot : (நோயி) பாதத் தடிப்பு நோய்:ஒரு வகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத்தோலில் முரட்டுத் தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய்

atlas bone : (உட) கழுத்தெலும்பு: மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு

atmosphere : . (இயற்) காற்று மண்டலம் : பூமியையும், வேறு சில கோளங்களை சூழ்ந்திருக்கும் வாயுக்கள் சூழ்ந்த மண்டலம்

atmospherics : (மின்) இடையோசைகள்: வானொலி, தொலைபேசி போன்றவற்றில் ஏற்புகளைத் தடைப்படுத்தும் இடை யோசைகள்

atmospheric pressure : (இயற்) வாயு மண்டல அழுத்தம் : பூமிக்கு மேலே உள்ள காற்றின் எடையினால் ஏற்படும் அழுத்தம். இந்த அழுத்தம் கடல் மட்டத்தில் ஒரு சதுர அங்குலத் திற்கு 14.7 இராத்தல் என்ற விகிதத்தில் இருக்கும். 14.7 இராத்தல் வாயுமண்டல அழுத்தமானது 29.92" உயரத்தில் பாதரசப்பத்தியைத் தாங்கி நிற்கும்

atom : அணு : ஒரு வேதியியல் மாற்றத்தில் பங்கு கொள்கிற ஒரு தனிமத்தின் மிகச் சிறிய துகள் என ஓர் அணுவைக் கருதலாம். இது 'புரோட்டான்' எனப்படும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர் மின்னாற்றல் கொண்ட ஒரு கரு மையத்தைக் கொண்டிருக்கும் இந்த புரோட்டான்களைச் சுற்றி 'எலெக்டிரான்கள்' எனப்படும் எதிர்மின்னாற்றல் கொண்ட உள்ளணுத் துகள்கள் சுழன்று கொண்டிருக்கும். ஓர் அணு, சமநிலை மின்னாற்றல் உடையதாக அமைந்திருக்கும்

atomic arc welding : (பற்) அணுச்சுடர் பற்ற வைப்பு: ஒரு வகைச்சுடர் பறற வைப்பு முறை. இதில் ஹைட்ரஜன் செல்லும் போது அணு ஹைட்ரஜனாக மாறி, மறுபடியும் மூலக்கூற்று ஹைட்ரஜனாக மாறுவதால் பற்ற வைப்பதற்கான வெப்பம் உண்டாகிறது