பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62

மேல் மாடத்தின் கூரைக்கும் முகட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி. பண்டையக் கட்டு மானங்களில், கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி

attic fan :(குளி.) புறம் போக்கி விசிறி: கட்டிடத்திலிருந்து சூடான காற்றை வெளியேற்றி அக்கட்டிடத்தைக் குளிர்விப்பதற்கு கட்டிடத்தின் மேற் பகுதியில் உள்ள புறம் போக்கி விசிறி

attitude : (வானூ) ஏற்றக் கோணம்: ஒரு விமானம் தனது ஊடச்சின் சார்வு மட்டத்திலிருந்து அடிவானத்திற்கு மேலெழும் கோணத்தின் அளவு

attitude indicator : (வானூ) ஏற்ற கோணங்காட்டி: அடிவானத்திற்கு மேலே விமானத்தின் நிலையை விமானிக்குக் காட்டக்கூடிய ஒரு சுழல்மானிக் கருவி. இதனை உயரங்காட்டி என்றும் அழைப்பர்

attraction : (மின்) கவர்ச்சி : மாறுபட்ட இரு காந்தத் துருவங்களுக்கு (வடதுருவம், தென்துருவம்) இடையே, அல்லது மாறுபட்ட இரு நிலையான மின்னேற்றங்களுக்கு (+ , -) இடையே செயற்படும் இழுப்புவிசை அல்லது விசை

audio (i hear) : கேட்பொலி : கேட்கும் ஒலியினைக் குறிப்பது. ஒலித்தகவல்களைக் கொண்டு செல்லும் மின்தூண்டு விசை

audio - frequency : (மின்) கேட்பொலி அலைவெண் : மனிதரின் காதுக்குக் கேட்கக்கூடிய அளவுக்கு மின்சுற்றுகளில் ஏற்றப்படும் மின்னேற்ற ஓட்டத்தின் விகிதம். இது வினாடிக்கு 16 முதல் 16,000 வரையிலான அதிர்வுகளைக் கொண்டிருக்கும்

audiometer : (மின்) ஒலிமானி: ஒலி அலைகளின் செறிவினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி

audion : (மின்.) ஆடியோன் : டாக்டர் லீ டிஃபாரஸ்ட் கண்டுபிடித்த முதலாவது மூன்று மின் முனைக்குழல்

auger: (க.வே.) துரப்பணம்: மரத்தைத் துளைக்கக்கூடிய ஒரு பெரிய கருவி. இதில் கருவிக்கும் செங்கோணத்தில் கைப்பிடி அமைந்திருக்கும். வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வகை துரப்பணங்கள் செய்யப்படுகின்றன

auger bit: தமருசி : கைப்பிடியில்லாத ஒரு துளைக்குங் கருவி. இது இடுக்கி திருப்புளியில் பயன்படுத்தப்படுகிறது

aurai transmitter: (மின்) காற்று மின்செலுத்தி : தொலைக்காட்சி நிலையத்திலுள்ள ஒலிச்செய்திகளை ஒளிப்ரப்புவதற்கான செலுத்தி

auricle : (உட.)

(1) காது மடல்: நுரையீரலுக்கு உயிரினங்களின் அடிக்காது மடல். (2) இதய மேலறை: இதயத்தின் மேலறைகள் இரண்டனுள் ஒன்று. இரண்டு கீழ