பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

652

பகுதியின்மீது ஏற்படும் அழுத்த விசையின் அலகு. இது பெரும்பாலும் ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனை பவுண்டு என்ற கணக்கில் குறிப்பிடப்படும்

universal : இன முழுதளாவிய : இயல்பாகப் பல பொருட்களுக்கும் உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக் கருத்துப் படிவம்

universal grinding machine : (பட்.) பொது சாணை எந்திரம் : சுழல் மேசை, சுழல் உருளை, சுழல் சக்கர முனை பொருத்தப்பட்டுள்ள ஒரு சாணை எந்திரம். இது நீள் உருளைச் சாணை, மேற்பரப்புச் சாணை, முகப்புச்சாணை முதலிய உள்முக, புறமுகச் சாணை தீட்டுதலுக்குப் பயன்படுகிறது

universal joint : (எந்.) பொது இணைப்பு : ஊடு அச்சுகள் நேர்கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒருவகை இணைவமைவு

universal milling machine : (எந்.) பொது வெட்டு எந்திரம் : ஊடுவெட்டாகவும்,நீளவெட்டாகவும் உலோகங்களில் பள்ளங்கள் வெட்டுவதற்கான, ஒர் எந்திரம். இதில் சுழலும் வெட்டுக் கருவிக்கு எதிராக வெட்ட வேண்டிய உலோகத் தகட்டினைச் செலுத்துவர். இந்தச் சுழல் வெட்டுக்கருவி ஒரு சுழல் மேசையுடன் பொருத்தப்பட்டிருக்கும்

universal saw table : (மர.வே.) பொது ரம்ப மேசை : சாய்தளத்தில் ரம்ப மேசை சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு ரம்ப மேசை

unlimited ceiling : (வானூ.) வரம்பற்ற உயர எல்லை : மேக மட்டம் 2742 மீட்டருக்கு மேற்பட்ட நிலையில் விமானம் தங்கு தடையின்றிப் பறப்பதற்கான உயரத்தின் எல்லை

unshielded carbon arc welding : காப்பற்ற கார்பன் வில் பற்ற வைப்பு : காப்புக்கருவி எதுவுமின்றி கார்பன் வில் பற்றவைப்பு முறை

unshielded metal arc welding : காப்பற்ற உலோக வில் பற்றவைப்பு : வெற்று நிலையில் அல்லது இலேசாக முலாமிட்ட கம்பி அல்லது சலாகை மின்முனையாகப் பயன்படுத்தப்படும் உலோக வில் பற்ற வைப்பு முறை

up-holşterry : (uot.Gsv.) மெத்தை வேலைப்பாடு : அறை கலன்கள் முதலியவற்றுக்கு மெத்தை, திண்டு பொருத்தும் வேலைப்பாடு

up keep : (தானி.) பேணுகைச் செலவு : உந்து ஊர்திகளைப் பேணிக் காப்பதற்கான செலவு

upper air : (விண்.) மேல் வளி மண்டலம் : மீவளி மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கு மிடையிலான வாயு மண்டலம்

upper cass : (அச்சு.) மேலின எழுத்து : அச்சுக்கலையில் சிறிய எழுத்துக்களிலிருந்து வேறுபட்ட தலைப்பு எழுத்துக்களைக் குறிக்கும் மேலின எழுத்துக்கள்

upper stage : (விண்.) இரண்டாம் கட்டம் : பலகட்டங்களுடைய ஒரு ராக்கெட்டில் இரண்டாவது அல்லது பிந்திய கட்டம்

up right : (க.க.) பாரந்தாங்கி: கட்டிடத்திற்குத் தாங்கலாக அமையும் தூண் அல்லது கம்பு upset : நிலை மாற்றுதல் : சுத்தியால் அடித்தல் அல்லது அழுத்தம் கொடுத்தல் மூலம் உலோகத்தைக் குறுக்குதல் அல்லது கனமாக்குதல்