பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
659

வெளியேற இடமளிப்பதற்காக அமைக்கப்படும் ஒரு சிறிய துளை

venthole: (உலோ) காற்றுப் புழைவாய்: ஒரு மணல் வார்ப் படத்தில் வாயுக்கள் வெளியேறுவதற்குள்ள துவாரங்கள்

ventilation: (க.க.) காற்றோட்டம்: அறையில் காற்றோட்டம் ஏற்படுமாறு செய்யும் முறை

ventilator: (க.க. ) பலகணி: வெளிச்சமும், காற்றும் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாதனம். அசுத்தக் சாற்றை வெளியேற்றுவதற்கான புழை

venti pipe: (க.க.) காற்றுக் குழாய்; பல்வேறு குழாய் அமைப்புகளிலிருந்து புகைக்கூம்பு வழியே காற்று வெளிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய்

ventricle: (உ.ட) 1.குழிவுக் கண்ணறை; உடலின் உட்குழிந்த பகுதி. 2. இதயக் கீழறை; சுருக்காற்றலை யுடைய இதயத்தின் கீழறை. வலது கீழறையிலிருந்து இரத்தம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. கீழறையிலிருந்து இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது 3. மூளை உட்குழி: மூளையின் உட் குழிவுப் பள்ளம்

vent stack: (க.க.) புகைக்கூம்பு: காற்றுக் குழாய்களுடன் இணைக் கப்பட்டுக் கூரைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் செங்குத்தான குழாய். இதன் வழியாக வாயுக்களும் புகையும் வெளியேறுகின்றன

vent wire :(வார்.) வாயுக் கம்பி ;வார்ப்பட வேலையில் நீராவியும், வாயுவும் வெளியேறு வதற்காக,வார்ப்பிலிருந்து தோரணியை அகற்று வதற்கு முன்பு ஒரு கம்பி மூலமாகத் துளைகள் உண்டாக்கப்படுகின்றன

veranda, (க.க.) தாழ்வாரம்: கட்டிடத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாறு அமைக்கப் படும் திறந்த நிலை ஒட்டுத் திண்ணை

veverdigris: (வேதி) தாமிரத்துரு; இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பு தாலும் தாமிரத்துரு உருவாகி றது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும் பயன்படுகிறது

verge : (க.க.) மோட்டு விளிம்பு: முக்குட்டுச் சுவர் கடந்த மோட்டு விளிம்பு. இது கூரையின் மஞ்சடைப்புக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும்

vermiculations (க.க) புழு அரிப்புத் தடம்: புழு அரிப்பு போன்ற வரிப்பள்ளங்களுடைய தடம்

vermilion: (வண்.) இரசக் கந்தகை; செந்நிறமான இரசக் கந்தகை. இது நிறமியாகப் பெரு மீள்வில் பய்ன்படுத்தப்படுகிறது. பாதரசச் சல்பைடிலிருந்து (HgS) பெறப்படுகிறது

Vernier: (விண்.) வெர்னியர்: ஒரு ஏவுகணையின் வெளிப்புறத்தில் ஏற்றப்பட்டுள்ள சிறிய ராக்கெட் எஞ்சின் இதனைக் கட்டுப்படுத் தும் கருவி மூலம் திருப்பலாம். இதனை கண்டுபிடித்தவர் பியர் வெர்னியர் (1580-1637) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை. அவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டுள்ளது