பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

662

டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி உணடாகும். சன்னிக்காய்ச்சல், அம்மை, நாய்வெறி நோய், இளம்பிள்ளைவாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபு ளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன

viscid: (இயற்.) நெய்ப்புத் தன்மை: நெய்ப்புத் தன்மை, ஒட்டும் இயல்பு

'viscosity : (குழை.) குழைம நிலை: பிசைவுப் பொருளின் திட்ட ஆற்றல், பிசைவுப் பொருளின் தன் ஈர்ப்பு ஆற்றல்

viscous : (வேதி.) பசைத் தன்மை: மெதுவாகப் பாயும் திரவங்களின் ஒட்டுத் தன்மை

viscosimeter : (குளி.பத.) பிசைவுப் பொருள் திட்டமானி : ஒரு திரவத்தின் பசைத் தன்மையை அளவிடும் கருவி

viscous friction : (தானி ) பசை உராய்வுத் திறன் : எண்ணெயின் அல்லது திரவத்தின் பாய்வுத் தடுப்புத்திறன். எண்ணெய்ப் படுகைகளுக்கிடையிலான உராய்வு

vise : (பட்.) பட்டறைப் பற்றுக் குறடு: பிடித்து நிறுத்துவதற்குரிய மரம் அல்லது உலோகத்தினாலான பற்றுக்குறடு, இதில் இரண்டு தடைகள், ஒன்று நிலையாகவும், இன்னொன்று நகரக்கூடியதாகவும் அமைந்திருக்கும்

visibility : (வானூ.) காண்பு நிலை : சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களை எவ்வளவு தூரத்திலிருந்து தெளிவாகக் காணலாம் என்பதைக் குறிக்கும் ஒளியளவு நிலை

vista : (க.க.) காட்சி வரிசை : சாலை மர அணிவரிசை

visual attral range : வானூர்தி நெறிமுறை : வானொலி உதவியால் இயக்கப்படும் வானூர்தி நெறிமுறை

visualize : உருவாக்கிக் காண் : அகக் காட்சியாக உருவாக்கிக் காண்; கற்பனை செய்து காண்

vital glass: புறஊதாக் கண்ணாடி: கட்புலனுக்கு அப்பாற்பட்ட ஊதாக்கதிர்களையும் ஊடுருவ விடும் கண்ணாடி

vitamins : ஊட்டச் சத்துக்கள் (வைட்டமின்கள்) : உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்படும் கரிமப் பொருட்கள்

vitreosity: (வேதி) பளிங்கியல்பு: கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கும் தன்மையும், பளிங்கின் திண்மையும், கண்ணாடி போலப் படிக உருவமற்ற இயல்பும் உடைய பண்பியல்பு

vítreous enamel : (உலோ ) கண்ணாடி எனாமல்: உலோகத்தில் பூசக்கூடிய குறைந்த நுண்துளையுடைய, கண்ணாடி போன்ற பள பளப்பான பூச்சுப் பொருள். இதனைப் பீங்கான் எனாமல் என்றும் கூறுவர்

vitreous electricity , (மின் ) பளிக்கு மின்வலி : கண்ணாடியில் பட்டினைத் தேய்ப்பதால் ஏற்படும் மின்னாற்றல்

vitreous body vitreous humour : (உட.) கண்விழி நீர்மம் : கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மம்