பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
663

vitreousness : (வேதி) கண்ணாடித் தன்மை : கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கக் கூடிய தன்மை; பளிங்கின் தன்மை

vitrescibility: கண்ணாடியாகுந் திறன் : கண்ணாடியாக மாறக் கூடியதன்மை

vitreum : (உட.) கண்விழித் திண்ணீர்மம் : கண் விழிக் குழியிலுள்ள திண் நீர்மம்

vitrifiability : கண்ணாடியாக்கத் திறன் : கண்ணாடியாக மாறத் தக்க தன்மை, கண்ணாடி போன்ற பொருளாக மாறும் நிலை

vitrification : பளிங்காக்கம் : கண்ணாடியாக மாற்றுதல்

vitriol : கந்தகத் திராவகம் : உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகளில் ஒன்று

voice coil : (மின்) குரல் சுருள் : ஒலி பெருக்கிக் கூம்புடன் இணைக்கப்படும் சிறிய கம்பிச் சுருள். குரல் சுருளின் புலத்திற்கும் நிலையான காந்தப் புலத்திற்குமிடையிலான எதிர் விளைவினால் கூம்பின் அசைவு உண்டாகிறது

volatile : (வேதி.) விரைந்து ஆவியாதல் : விரைவாக ஆவியாகும் தன்மை

volatile liquid : (குளி.பத.) ஆவியாகும் திரவம் : அறை வெப்ப நிலையிலும் வாயுமண்டல அழுத்தத்திலும் விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம்

volatile oil : நறுமண நெய்மம்: தாவரங்களுக்கு மணம் தரும் எண்ணெய்ப் பொருள்

volatility : (தானி) ஆவியாகும் தன்மை: ஒரு திரவம் அல்லது எரி பொருள் திரவ நிலையிலிருந்து விரைவாக ஆவியாகும் தன்மை

volt ;(மின்.) மின் அலகு (ஓல்ட்): ஒரு 'ஓம்' தடைக்கு எதிராக ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தைக் கொண்டு செல்லக்கூடிய மின்னியக்கு விசை ஒரு 'ஓல்ட்' எனப்படும்

volta, Alessandro (174-51827): (மின்.) ஓல்ட்டா, அலசாண்ட்ரோ (1745-1827) ; புகழ்பெற்ற இத்தாலிய விஞ்ஞானி. கால்வானிஸ் விலங்கு மின்விசை, வேதியியல் மின்கலம், வேதி மின்கலத் தகட்ட டுக்கு போன்ற முக்கிய அறிவியல் க்ண்டுபிடிப்புகன்ளச் செய்தவர். அணுக்கத்தால் நிலை மின்னாற்றல் உண்டு பண்ணும் பொறியமை வையும் இவர் கண்டுபிடித்தார்

voltage . (மின்.) மின் வலியளவு : மின் வலி அலகு எண்ணிக்கை அளவு

voltage multiplier : (மின்) மின்னழுத்தப் பெருக்கி : மின்னழுத்தத்தை இரண்டு, மூன்று, நான்கு மடங்குகளாகப் பெருக்கக்கூடிய திருத்திமின் சுற்றுவழி

volt-ampere - (மின்.) ஓல்ட் ஆம்பியர் : மேலீடாகத் தோன்றுகிற மின்விசை அளவீட்டு அலகு

volta’s law . (மின்) ஓல்ட்டா விதி : எந்த உலோகங் களுக்குமிடையிலான மின்னழுத்த நிலை வேறுபாடானது. தொடர் வரிசையிலுள்ள எடை உலோகங் களுக்கிடையிலான மின்னழுத்த நிலை வேறுபாடுகளின் கூட்டுத் தொகைக்குச் சமமானதாக இருக்கும் என்பது இந்த விதி

voltage amplification ; (மின்) மின்னழுத்த விரிவாக்கம் : வானொலி அலைவெண் விரிவாக்க நிலைகளில் உண்டாகும் வானொலிச் சைகைகளைப் பெருக்கிக் காட்டுவதற்கான ஒரு வகை