பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 38 3. கடற் காற்று 4. நிலக்காற்று பருவக்காற்று என்றால் என்ன? குறிப்பிட்ட பருவத்தில் இந்தியப் பெருங் கடலிலிருந்து வீசும் காற்று. பருவக்காற்றின் வகைகள் யாவை? 1. தென்மேற்குப் பருவக் காற்று 2. வட கிழக்குப் பருவக் காற்று காற்று எவ்வாறு. ஏற்படுகிறது? காற்று வெளியில் வளியின் இயக்கம் காற்று எனப்படும். காற்று வெப்பநிலை வேறுபாட்டால் அது உண்டாகிறது. கதகதப்பான காற்று குளிர் காற்றைவிட எடைக் குறைவு. ஆகவே, மேல் எழும்புகிறது. அந்த இடத்தை அடைத்துக் கொள்ள குளிர்காற்று முந்துகிறது. இதனால் காற்றுகள் உண்டாகின்றன. காற்றின் வேலைகள் யாவை? 1. அரித்தல் 2. கடத்தல் 3. படிய வைத்தல் 4. இயக்குதல் (காற்றாலை). காற்றின் வேலையால் தோன்றும் மூவகை நிலத் தோற்றங் கள் யாவை? 1. மணற்பாலை (எர்க்). மணலாலானது. 2. கரடுமுரடான நிலம் (ஹமாடா). அரிபட்ட கரடு முரடான நிலப்பரப்பு. 3. கற்பாலை (reg) பாலை மேற்பரப்பு. பாலையின் மேற் பரப்பு கூழாங்கற்களாலும் பரல்களாலும் நிரம்பி மணல் மேடுகளின் வகைகள் யாவை? 1. குறுக்குவாட்டு மணல் மேடுகள் 2. நீள்வாட்டு மணல் மேடுகள் தென்மேற்குப் பருவக்காற்று என்றால் என்ன? தென்மேற்கிலிருந்து வரும் ஈரக் காற்று ஏப்ரல் முதல் அக்டோபர் இருக்கும். மழை அதிகம் தருவது. வடகிழக்குப் பருவக் காற்று என்றால் என்ன?