பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. 46. 47. 48. 49. 75 அல்லது இரவு. 2. அலைகளை உண்டாக்குபவை. 3. உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவிப்பவை. 4. பிளவுக்கோடுகள் நலிவாக உள்ள இடத்தில் தோன் றுபவை. 5. எரிமலையோடு தொடர்புள்ளவை. நிலநடுக்கங்களின் செறிவென்ன? 1. ஒவ்வோராண்டும் 20,000-30,000 மக்கள் நிலநடுக் கங்களுக்கு இரையாகின்றனர். 2.7-8 அளவெண்ணுள்ள நிலநடுக்கங்களே உயிருக்கும் உடைமைக்கும் சேதம் விளைவிப்பவை. 3. அளவெண் 5க்குக் கீழ் உள்ளவை தீங்கற்றவை. நிலநடுக்க அலைகளின் வகைகள் யாவை? 1. முதன்மை அலைகள் (P): நீள் அலைவகை. ஒலி அலையில் உள்ளது போன்று துகள்கள் அதிர்வுறும் இது இழுப்பு அல்லது தள்ளு விளைவை உண்டாக்கும். இதன் விரைவு 7.8 கிமீ/வினாடி. இவை நிலநடுக்க வரைவு நிலையத்தை அடைபவை. 2. இரண்டாம் நிலை அலைகள் (S): குறுக்கலைகள். இவற்றில் பரவலுக்கு எதிராகச் செங்கோணத்தில் துகள்கள் அதிர்வுறும். இவை கெட்டிப் பொருள்கள் வழியாகவே செல்லும். இவற்றின் நேர்விரைவு 435 கிமீ/வினாடி. 3.நீள்அலைகள் கடல் ஆலைகள் போல் புவிப்பரப்பு நெடுகச் செல்பவை. இவற்றிற்குச் சுழல் இயக்கம் உண்டு. அதிகச் சேதம் உண்டாக்குபவை. இம்மூன்று வகை அலைகளையும் அறிமுறையில் முன்னறிந் தவர் யார்? 1829இல் பாய்சன் முன்னறிந்தார். இவற்றை வேறுபடுத்தி அறிந்தவர் யார்? 1897இல் ஆர்.டி. ஒல்டுகாம். நிலநடுக்கங்களின் விளைவுகள் யாவை? 1. இவற்றின் அழிக்கும் ஆற்றல் 10,000 அணுக்குண்டு வெடிப்புகளுக்குச் சமம்.