பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அறிவுக்



615.நிந்தைமொழிகள் நெருப்புப் பொறிகளை ஒக்கும்; ஊதிவிடாவிட்டால் தாமாக அவிந்து போகும்.

போயர்ஹீன்

616.எந்த ஆழ்ந்த புண்ணேனும், வடுவின்றி ஆறியதுண்டோ?

பைரன்

617.தற்புகழ்ச்சி முடைநாறும் என்பர்; அப்படியானால் அவர்க்கு அணியாயமாய்க் கூறும் அவதூற்றின் நாற்றம் தெரியாது போலும்!

கதே

618.'அவதூறு' சொல்லும் வண்டிக்கு மைபோட ஆள்பஞ்சம் உண்டாவதில்லை.

ஊய்டா

619.உலகத்தில் ஒருபாதிக்கு அவதூறு சொல்லுவதில் ஆனந்தம் மற்றப் பாதிக்கு அதை நம்புவதில் ஆனந்தம்.

பழமொழி

620.தன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது.

பாஸ்கல்

621. தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப் பார்த்துக் குரையாமல் இராது.

ஹோம்