பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

விக்கொண்டு முன்னணிக்குச் சென்று சமர் புரிந்தான்.

போரஸின் படையிலிருந்த 300 தேர்களும் 200 யானைகளும், 4,000 குதிரைகளும், 30,000 காலாட் படையும் யவனப் படையை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டன. முன்னணியில் காலாட் படையும், அடுத்து யானைப் படையும், இரண்டு பக்கங்களிலும் தேர்களும் அவைகளுக்குப் பின் குதிரைப் படைகளும், இவை அனைத்திற்கும் பின்னால் காலாட் படை முழுவதும் அணிவகுத்து நின்று போர் செய்தல் அக்காலத்து இங்தியப் போர் முறை. அதன்படியே போரஸின் படையும் அணிவகுத்துச் சென்ற காட்சி கோபுரங்கள், கொடிகளுடன், ஒரு நகரமே பெயர்ந்து செல்வதுபோல் தோன்றியது.

அன்றைய போரைப்போல் யவனர்கள் அதுவரை பார்த்த தில்லை. அலெக்சாந்தர் எதிர்பார்த்த படி அவனுடைய குதிரைப் படைகளும் மறு கரையில் கிரேடரஸ் தலைமையில் அவன் நிறுத்தி வைத்திருந்த காலாட்படையும் முறையாகப் போர்க்களம் வந்து சேர்ந்தன. ஆனால், போரஸ் அன்று அந்த இடத்தில் போர் நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்பொழுதுமே அவர் ஆயத்தமாயிருந்த நிலையில், அன்று யவனர் படையை எதிர்த்துக் கடும் போர் புரிந்தார். யானைகள் அன்று எதிரிகளின் அணிக்குள் புகுந்து மிகுந்த நாசத்தை விளைவித்தன. அவைகளை யவனர் எவ்வாறு அடக்க முடிந்தது என்ற விவரம் தெரியவில்லை. ஒரு வேளை மாவுத்தர்கள்மீது அம்பு தொடுத்து முன்ன-