பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

கூறுகின்றது. 2,000 ஆண்டுகட்கு முன்னரே அத்தகைய நூல் ஒன்று இந்தியாவில் இயற்றப் பெற்றது பெருமைக்குரியது.

சந்திரகுப்தருக்குப் பின் அவர் மைந்தர் பிந்துசாரர் மோரிய வமிசத்து இரண்டாம் பேரரசராகக் கி. மு. 298 இல் அரியணை ஏறினார். அவருக்கும் சாணக்கியர் ஆலோசனை கூறிவந்தார். வரலாற்றில் அவரைப் பற்றி அதிகமான விவரமில்லை. ஆயினும் அவரும் வீரராக விளங்கினார் என்றும், பல போர்களில் வெற்றி பெற்று, பகைவரின் எமன் என்று பொருள்படும் ‘அமித்ர காதா’ என்ற பட்டம் பெற்றார் என்றும் தெரிகின்றது. தக்காணத்தில் நெல்லூர் வரை அவர் வென்றிருக்க வேண்டும். ஏனெனில் அவருடைய மைந்தர் அசோகர் பட்டத்திற்கு வருகையில் அந்தப் பகுதியும் அவர் இராச்சியத்துடன் சேர்ந்திருந்தது.

பண்டைத் தமிழ் நூல்களில் மோரியர் தமிழகத்தின் மீதும் படையெடுத்ததாகக் கூறப்பெற்றுள்ளது.

‘கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு’

என்று மாமூலனார் பாடியுள்ளதிலிருந்து, மோரியர் வடுக மன்னருடைய படையின் உதவியுடன், தென்னார்க்காட்டிலுள்ள மோகூர் நகர்வரை வந்ததாகத் தெரிகிறது. முதலில் மோகூர் மன்னன் பணிய மறுத்த போதிலும், பின்னர் மோரியர் இரண்டு இலட்சம் வீரர் அடங்கிய பெரும்படையுடன் வந்து தாக்கியதாகவும், மன்னன் பொதிகை மலைப் பக்கம்