பக்கம்:அலைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 131



இன்றி
கண்டது பின்னையும் என்?
கண்டதும் வேண்டாம்
கொண்டதும் வேண்டாம்
உன்னையும் என்னையும்
நம்மிலிருந்து
நான் நான் எனது என
விண்டதும் வேண்டாம்

எங்கு படித்தேன்? ஆ. நினைவு வருகிறது! என் தகப்பனார் இறந்தபின் அவர் சொந்தங்களைக் கிளறுகையில் கிடைத்த ஒரு குறிப்பு.

"தன் குழந்தைகளை இங்குதான் மாமி பெற்றாள். இந்த் வீட்டில், இந்த ஒடுங்கை யறையில்’’ என் தாய்தான் துணை.

முதலில் பெண். ஐந்து வருடங்களுக்கப்புறம் ஒரு பிள்ளை. கச்சிதம்.

“வாத்தியார் பிள்ளை மக்கு” என்று பெரியவாள் வாக்கு பொய்க்க, ரங்கசாமி வாத்தியார் மகன்; வீணாகாமல் இருக்க, என் மகன்’ என்பார் என் தகப்பனார்.

தகப்பன் மகனை மெச்சமாட்டான்.

நானும் மெச்சும்படியாயில்லை.

குற்றம் யாருடையதோ?

வருடா வருடம் வகுப்பின் பரிசுகள் ரங்கசாமி வாத்தியார் பையனுக்கே சாஸனமாகி விட்டாற்போல், அவனையே போய்ச் சேரும். பையன் படிப்பில்தான் முதல் என்றால் விளையாட்டிலுமா அப்படி? நியாயத்திலும் அக்ரமம் என்றால் அதுதான்!

பதினாலு வயதில் பையன் மெட்ரிகுலேஷனில் பள்ளிக் கூடத்திற்கு பெருமையோடு தேறினான், பயல் மிட்டாயாட்டம் இருப்பான், சின்னதாய். ஆகிருதியில்லை. சிரமப் பட்டுத்தான், வயதுக்கு விலக்கு வாங்கி, காலேஜில் சேர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/133&oldid=1288289" இலிருந்து மீள்விக்கப்பட்டது