பக்கம்:அலைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கிருந்தோ வந்தேன் O 159



தம்பி தலையை ஆட்டினான், அவனுக்கு வாயடைத்து விட்டது.

'சின்ன' தன் முகத்தில் திடீரெனச் செழித்த செந்தழில் இடத்தை ஏற்றும்போல் ஒளி வீசிற்று. சின்னத் திண்ணையி லிருந்து குதித்தோடி வந்து பண்டாரத்தின் முகத்துள் உற்று நோக்கினான். அவன் கைவிரல் நுனிகள் ஆண்டியின்மேல் லேசாய்ப் பட்டன. ஆண்டியின் உடல் மயிர்க்கால் நரம்புகள் தற்காப்பில், அச்சத்தில் குறுத்துகுறுத்து உள்வாங்கின.

ஏன் என்னைத் தொடறான்? என்னண்டை என்னத்தைத் தேடறான்?

பையன் என்ன தேடினானோ என்ன கண்டு ஏமாந்தானோ? அவன் சுறுசுறுப்பு, பற்றிய வேகத்தில் சட்டென விட்டது. கண்களில் அசடு குழம்பிற்று வாயில் விரல் போட்டுக் கொண்டு நின்றான். பையன் சின்னப் பையன் தான். ஆனால் வாயில் விரல் போட்டுக்கொள்ளும் வயதல்ல. சற்று விளக்குப் பார்வை. ஆனால் விளக்குப் பார்வையுமல்ல என்னத்தையோ தேடித்தேடி அந்தத் திக்கிலேயே சாய்ந்து போன நோக்கு.

பையன் ஆண்டிக்கெதிரே உட்கார்ந்து கொண்டான். வாயில் மாட்டிய விரலை இன்னும் எடுக்கவில்லை, கடை வாயில் எச்சில் வழிந்தது. வாலைக் குழைக்கும் நாய் முகத்தில் காணும் சோகக் கனிவொழுகி, கண்கள் அழகுற்றன. அவனுள் குமுறும் குழம்பில் மார்பு செவ்விட்டது.

உள்ளேயிருந்து 'கம்’முனு வெங்காயம் மூக்கைத் துளைக்குதப்பா! சாம்பாரிலே முளுசா விட்டிருப்பாங்களா? இல்லே பொரியல்லெ அரிஞ்சு போட்டிருப்பாங்களா? திண்ணையிலே குந்த வெச்சுட்டு இவங்க மாத்திரம் உள்ளே போயிட்டு வெளியே வந்து 'ஆய்ப்போச்சு பண்டாரம்’னு கைவிரிப்பாங்களா? ஆண்டவா! என்மேலே இன்னிக்கு என்ன எண்ணம் வெச்சிருக்கியோ தெரியல்லியே, இருளோன்னு இருக்குதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/161&oldid=1288548" இலிருந்து மீள்விக்கப்பட்டது