பக்கம்:அலைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 O லா. ச. ராமாமிருதம்



“எனக்கே தெரியல்லியே, ஆசையா வரதேப்பா!’

என்னை மீறி எழும் கேவலின் குமுறலில், என் உடல் அதிர்கையில், என் காலடியில் என் பூமி கிடுகிடுக்கிறது.

ப்போது மாடி அறையிலிருந்து நான் கவனிக்கையில் கீழே, எதிர் சாரி வீடுகளின் சுவரோரமாய், குனிமுகத்தில், தன் யோசனையில் தன்னையிழந்து தத்தித் தத்தி அவன் ஒடி வருகையில் (அல்ல போகையிலா?) அந்தச் சிறு கூடான உடம்பு, மேயும் கீரிப் பிள்ளையை நினைவூட்டுகிறது. அவனே தன்னுள் ஏதோ பாவனையில் தானிருக்கிறான்.

பின்னால் பெருமூச்சுக் கேட்டுத் திரும்புகிறேன். கையைப் பிசைந்துகொண்டு ஸைந்தவி நிற்கிறாள்.

ஸைந்தவி என்று ராகத்தின் பேராமே?

யாருக்குத் தெரியும்? யார் கேட்கிறார்கள்? யார் பாடுகிறார்கள்?

பாடினால்தானே கேட்க முடியும்?

ஸைந்தவிக்கே தெரியாது.

ஸைந்தவி, ஸைந்தவி பாடுவது இருக்கட்டும். ஸைந்தவிக்குப் பாட்டே சுட்டுப் போட்டாலும் வராது. -

இத்தனைக்கும் அவள் தகப்பனார் பாட்டு வாத்தியார். அவர் பெண்கள் அத்தனை பேருக்கும் ராகங்களின் பெயர் தான்.

"இந்தப் பேர் என்று ஒன்று இருக்கிறதேப்பா அது பொல்லாத போலியப்பா !”

அம்மாவின் உடுக்கடி பாஷை ஒரு சமயம் சிரிப்பு வந்தா லும் ஒரு சமயம் சுருக்’,

ஸைந்தவி கண்களினின்று புலுபுலுவென உதிர்வன அத்தனையும் முத்தானால், அதுவும் அவள் தொட்டால் சிணுங்கியாயிருப்பதற்கு, இந்த வீட்டில் புகுந்ததிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/182&oldid=1290258" இலிருந்து மீள்விக்கப்பட்டது