பக்கம்:அலைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 O லா. ச. ராமாமிருதம்



"அணில்ப்பா அணில்! “

“காதண்டை வந்து கத்தாதே நான் செவிடில்லை.”

"சொல்றது புரியாட்டா, புரிஞ்சுக்கற வரைக்கும் புரிஞ்சுக்காதவாள் கூட செவிடுதான்".

இதற்குப் பதில் என்னிடம் இல்லை.

இதற்குப் பதில் உண்டோ?

அவன் விழிகள் பளீரிடுகின்றன.

"நீ கூட கதை சொன்னையே, ராமர் தடவிக் கொடுத்தார்னு அதே அணில்ப்பா. முதுகிலே நாமம் பளிச்சினு! இன்னும் கொஞ்ச நாளில் என்னைத் தொடவிடும். இப்பவே ரொம்பக் கிட்ட வரது. வேர்க்கடலையை என் கையிலிருந்து வாங்கிண்டிதப்பா! நிஜம்மா! சத்தியமா!"

"சீ-!"

"சரி இனிமேல்லேப்பா! பின்னே நீ நம்பமாட்டேன்கிறியே? ஒரு நாளைக்குப் பாரு, என் நிஜார்ப் பையிலேயே போட்டுண்டு வரேன். அப்பத்தான் நம்புவே. என் தட்டிலிருந்தே சாதம் எடுத்துக் கொடுப்பேன், தின்கறதா இல்லையா பாரு!”

"சீ! கண்றாவி அதையெல்லாம் வீட்டுக்குள்ளே கொண்டு வந்தையோ கொலை பண்ணிடுவேன் ஜாக்கிரதை!"

“சே இதென்னப்பா அம்மா இப்படி அசிங்கப்படறா? ராமரே தடவிக் கொடுத்தாரே, நம்ம தொடக்கூடாதா? அப்பா, அணிலுக்குள்ளே ராமர் இருக்காரோன்னா?”

".........."

‘ஏம்பா முழிக்கறே? ராமர் கதைக்கு முன்னால் ப்ரகலாதன் கதை சொன்னையே. சாமி தூணிலும் இருக்கார் துரும்பிலும் இருக்கார்னு ப்ரஹ்லாதன் சாமியும் விஷ்ணு, ராமரும் விஷ்ணு தானே! அப்போ ராமர்கிட்ட விஷ்ணு இருந்தால், அணிலில் ராமர் இருக்கமாட்டாரா? இல்லாட்டா அந்த விஷ்ணு நாமம் எப்படி அதன் முதுகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/188&oldid=1290266" இலிருந்து மீள்விக்கப்பட்டது