பக்கம்:அலைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்தும் வேரும் O185


‘ஸைந்தவீ, என்னை மன்னித்துவிடு!’’

வெளுத்த உதடுகள் லேசாய் நடுங்கி, பிறகு புன்னகையில் இளகிச் சிவப்பு கட்டின, காய்மீது படரும் தளிரொளி போல், கண்ணைத் திறவாமலே, கால்மாட்டில் கட்டிலோடு கட்டிய தொட்டிலைச் சுட்டிக் காட்டினாள்.

அப்போது குழந்தையை நான் பார்க்கவில்லை. அது பிறந்தது என் தவறு. உறங்கட்டும். என் தவறைத் தட்டியெழுப்ப வேண்டாம்.

ரமணி எங்கள் தவறு என இருவரும் ஒரு மனதாய் நிச்சயித்தோம்; ஒரு மனதாய் நேர்ந்தவனை.

ஆனால் அப்படி நாங்கள் நினைத்தது தவறு என்று எங்களுக்கு உறுத்துவது போன்று, பரம்பரையின் வாக்காய் அவ்வப்போது அவனின்று வெளிப்படும் பேச்சாலும் செய்கையாலும் எங்கள் இருண்ட நேரங்களைத் திடீர் திடீரென ஒளிமயமாக்குகிறான்.

"அப்பா! அப்பா!!’

இதோ மேலே ஒடி வருகிறான்.

அவனுக்கு மூச்சு இறைக்கிறது. எங்களை மாறி மாறிப் பார்க்கிறான். மூக்கு நுனியில் திட்டாய் அழுக்கு.

“ அப்பா ! இன்னிக்கு ஒரு புது ப்ரண்டு புடிச்சிருக் கேன் 1’’

‘உனக்கென்னப்பா குறைச்சல்?’’

"புது ‘ப்ரண்டு' ன்னால் புது வால்!" அவன் அம்மை முகம் சுளிக்கிறாள். "குப்பையும் கோஷ்டமும் இன்னும் ஒரு பங்கு கூட!"

"இந்த வால் என் வால் இல்லேம்மா! நிஜ வால்!”

"உன்னதெல்லாம் பின்னே என்ன பொய் வாலா?’’

"இல்லேம்மா இது அப்பாவின் தர்மா ப்ளாக்கின் 'ப்ரஷ்' மாதிரி.

"என்னடா உளர்றே?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/187&oldid=1290265" இலிருந்து மீள்விக்கப்பட்டது