பக்கம்:அலைகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272 O லா. ச. ராமாமிருதம்


பால் ஒரு தினுசா படபடத்துண்டு குவளையிலிருந்து சொம்புலேயிறங்கி, சொம்பு நிறைஞ்சு நுரை வழியறப்போ . அதுக்கு ஒரு உசிரு இருக்கு. எப்படியும் அது பசுவின் ரத்தம் தானே!

அம்மா கூடத்தைப் பெருக்கினாள். என்கிட்ட வந்ததும் என்னை சுத்திப் பெருக்கிண்டு போனாள்.

நான் உக்காந்திண்டேயிருக்கேன்.

அம்மா தோட்டத்துக்கு போய் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து, மடியிலிருந்து ஊஞ்சல்லே பூவைக் கொட்டறாள். புலுபுலுன்னு சின்னப்போரா குவிஞ்சு நிக்கறதுகள். ஒருவேளை நான் தொடுப்பேன்னு எண்ணமோ என்னவோ!

ஆனால் நான் உக்காந்த இடத்தை விட்டு அசையல்லே.

அம்மா மறுபடியும் அதையெல்லாம் வாரி எடுத்து மடிலே போட்டுண்டு சமையலறைக்குப் போயிட்டா.

வெத்தல் குழம்பு சுண்டக் காயற வாசனை கம்முனு சமையலுள்ளேருந்து கிளம்பறது. (என்னதான் நீ ஆயிரம் சாம்பார் கறி பண்ணு, அந்த வெத்தக் குழம்புக்கும் சுட்ட அப்பளாத்துக்கும் இருக்கிற ஏர்வைக்கு மிஞ்சித்தான் எல்லாம்!)

அம்மா பூச்சரத்தோடு வந்து ஒண்ணுமே பேசாமே எனக்கு சூட்டிட்டுப் போனா, அவளும் வெச்சிண்டிருக்கா. ஆனால் எனக்குத்தான் நிறைய.

கொல்லைப்புறத்திலேருந்து கொஞ்சம் கொஞ்சம் வானத்தின் வர்ணம் தெரிகிறது. வெளுப்பு நீலமாகி, நீலம் பச்சையாகி, பச்சை சேப்பாகி, சேப்பு இப்போ மசிக்கறுப்பா ஆயிண்டேயிருக்கு,

அம்மா சுவாமி விளக்கை நமஸ்காரம் பண்ணறாள். மனஸுக்குள்ளே ஸ்தோத்திரத்தின் உச்சரிப்பில் அவள் உதடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/274&oldid=1287233" இலிருந்து மீள்விக்கப்பட்டது