பக்கம்:அலைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகல் கனவு O 37


இந்தக் குடும்ப உழற்சியில் நான் அவளை மறந்துவிடுவேன். இதில் எதுதான் நிற்கும்? எந்த மகா சக்தியும் சகதிக்கு வர வேண்டியதுதான். இப்போது, பச்சை மரத்தில் பாய்ந்த கோடாரிபோல் அவள் என் மார்பைப் பிளந்து கொண்டிருந்தாலும், நாளடைவில் பாசி மேலே மூட மூட, அவன் உள்ளாறி விடுவாள்.

வேதனையே அதுதான்...!

திடீரென்று அவளைக் கடைசியாய் நான் கண்ட காட்சி என் கண் முன் வந்து நின்றது. ரிக்க்ஷாவில் அவள் கூட்டை அவன் ஏற்றிக்கொண்டு செல்கையில், அந்த உடல் துவண்டு உயிரற்ற கைகளும் தலையும் லொடலொட என்று தொங்கலாடின.

தலை மயிரில் ஒரு கொத்து மருக்கொழுந்து.

எனக்குப் 'பகீர்’ என்றது. ”அம்மாடி......!”

“என்ன! என்ன!” என்று அலறிப் புடைத்துக்கொண்டு என் மனைவி ஓடிவந்தாள்.

“என்னடி பண்ணுவோம்! இன்னும் எத்தனை நாள் இப்படி!”என்று விக்கினேன்.

மண்டையைத் தொட்டாள்.

“ஐயையோ நெருப்பாய்க் காயுதே”-சொல்லவே இல்லையே! நேரமும் ஆயிடுத்து; வீட்டிலும் ஒருத்தருமில்லையே! படுத்துக்கொள்ளுங்கள். விடியற்காலையில்தான் வைத்தியனைக் கூப்பிடணும். படுத்துக்கொள்ளுங்கள். இதோ வந்து விட்டேன்...’

அவள் என்னைப் படுக்க வைத்துவிட்டு, பாலாடையையும் ஒரு துணிக் கிழிசலையும் எடுத்துக்கொண்டு, இருளைத் தேடிச் சென்றாள்,

அ.-3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/39&oldid=1285565" இலிருந்து மீள்விக்கப்பட்டது