பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

"உனக்கு இப்போது இன்னொரு பொறுப்பும் கூடுகிறது. இந்த ரகசியமும் கண்ணாத்தாளுக்குத் தெரியக் கூடாது; ஏனென்றால் ஒரு உத்தமி மலடியாக வாழ விரும்பினாலும் விரும்புவாளே தவிர மானம் இழந்தவளாக வாழ விரும்பவேமாட்டாள்” என்றார் கொரியன்.

உடலை அடக்கி, நாவை அடக்கி, மனத்தை அடக்க தெய்வப் பிறவியைப்போல வாழ்ந்த கண்ணாத்தாள் இறுதிவரை ரகசியத்தை வெளியிடாமல் அந்தக் குழந்தையைத் தன் குழந்தையைப் போலவே சீரோடு வளர்த்துப் பெரியவளாக்கி திருமணமும் செய்து கொடுத்து விட்டாள். குழந்தை மலையாளத்திலே பிறந்ததால் பிற்காலத்தில் அவளுக்கு ’மலையாளத்து ஆச்சி' என்ற பட்டப் பெயரும் வந்து விட்டது.

.* இந்தக் கதை ஒரு உண்மைத் தடாகத்திலே மிதக்கும் கற்பனைத் தெப்பம்.


-முடிந்தது-