பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாடாத பாசிச் ஊருக்கு அருகே இருந்த ஒடைப்பாலம். அங்கே அமர்ந்திருந்த அந்த நால்வரின் உரையாடலுக்கு வரையப்பட்ட ஒவியம்போல், மாலைநேர மஞ்சள் வெயில், பாலத்தில் பாதியும், அவர்கள் வாய்களில் மீதியும் விழுந்து கொண்டிருந்தது. பேச்சுக்கு ஏற்றாற்போல அவர்கள் வாய்கள் மஞ்சள் தனமாக விளங்கின. பாலத்தின் ஒரு ஒரத்தில் ஒரு காலை தூக்கி கையால் விலாவோடு சேர்த்து அனைத்தபடி இருந்த கிருஷ்ணன், தமது இதர சகாக்களைப் பார்த்து ஏதோ ஒரு மூச்சில், "அவன் ரொம்ப சின்னப் பையன்ப்பா.. என்னைவிட ஒரு வயசுதான் அதிகம்" என்றார். - அந்த நாற்பது வயதுக்காரர்களுக்கு அருகே, நெற்றியைப் பிடித்துக்கொண்டிருந்த வாலிபப் பையன் பெருமாள். "அவரோ அல்லது நீரோ சின்னப் பையன்னா, நான் இப்போ எங்க அம்மாகிட்ட பால் குடிச்சிக்கிட்டு இருக்கணும்" என்றான். உடனே, அவனை அடுத்து இருந்த ஐம்பது வயது லட்சுமணன் 'பாலுணர்வு தெறிக்கும் படியான ஒரு பேச்சை போட்டார். அவர், பேச்சை முடிக்கு முன்னாலேயே, இரண்டுபேர் விழுந்து விழுந்து சிரித்தபோது, சின்னப்பையன்கள் லிஸ்டில் இருந்து விடுபட்டாலும், வாலிப லிஸ்டிற்குள் இன்னும் வராத விடலைப் பையன் ராமன், எழுந்து நின்றே சிரித்தான். கிருஷ்ணன் மாமாவோட பேச்சு அவனுக்குப்