பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிவாணரைப் பற்றிய

குறிப்புகள்

ஆஸ்கர் ஒயில்ட் (1856-1900)

ஐரிஷ்காரர். டப்ளின் நகரத்து டிரினிடி கலாசாலையிலும், ஆக்ஸ்போர்ட்டு மாக்டலின் கலாசாலையிலும் கல்வி பயின்றவர். 1895-ம் u அவர் சிறைவாசம் செய்ய நேர்ந்தது. சிறையிலேயே அவர் அநேக நூல்களை இயற்றியுள்ளார்.

இக்பால் (1878-1938)

இந்தியாவின் வட மாகாணமாகிய பஞ்சாபில் பிறந்தவர்; எம். ஏ. பட்டம் பெற்றவர் ; வக்கீல் தொழில் நடத்தினார். உர்துாவிலும் பாரசீக பாஷையிலும் பெரிய கவிஞர். 'இஸ்லாத்தின் கவிஞர்' என்று புகழ் பெற்றவர்.அழகான தேசீய கீதங்கள் பாடியுள்ளார்.

எட்வர்டு கார்ப்பென்டர் (1844-1929)

இங்கிலாந்தின் தவப் புதல்வர்களில் ஒருவர் ; மகாஞானி ; சமதர்ம உணர்ச்சி மிக்கவர். 'சிருஷ்டியின் கலை’ 'நாகரிக நோயின் காரணமும் பரிகாரமும்’, ஜனநாயக லட்சியம் முதலிய பல நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.

கீட்ஸ் (1795–1821)

ஆங்கில மகா கவிகளில் ஒருவர். சாதாரணக் கல்வி பெற்று மருந்து ஷாப்பில் வேலை பார்த்தவர். 21-வது வயதில் அந்த வேலையை விட்டு விலகிப் பாடல்கள் இயற்றினார். ஆரோக்கியம் பெற ஐரோப்பா சென்ற இடத்தில் 26வது வயதில் அகால மரணம் அடைந்தார். கவியுலகில் உன்னத ஸ்தானம் அடைந்துள்ளவர். அறிஞர்கள், 'கவிஞரின் கவிஞர்' என்று இவரைப் புகழ்கின்றனர்.