பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எட்டாத லட்சியம்


I

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி - என் காதலி

எந்த நேரமும் என் அருகிலே.

அவள் மின்னும் பாதம் தெரிகிறது,

அவள் ஆடையின் கீதம் கேட்கிறது.

II

அவள் அடியெடுத்து வைப்பதே அழகு ;

அவள் குழலை விரைந்து முடிந்துளாள்,

பின்னல் தோளிலே புரளும்,

இடைக்குக் கிழே சரிந்து தொங்கும்.

III

மைதானத்தில் என் முன் ஒடுவாள் ;

எல்லோரும் சென்று தேய்ந்த வழியில்

என்னையும் இழுத்துச் செல்கிறாள் ;

ஆனால் திரும்பி மட்டும் பார்ப்பதில்லை.

IV

ஆயினும் அவள் குரல் கனவில் கலந்து

நாளுக்கு நாள் என்னை அதிகமாய் மயக்கும்.

அந்தக் காதல் - குரல்! - ஐயோ!

அது முன்னிலும் தூரத்தில் போய்விட்டதே!

v

அடைவோம் என்ற நம்பிக்கை

அதிகமாய் இருந்த பொழுது

கவலையின்றிப் பின் தொடர்ந்தேன்.

இளமை யிருந்ததால் ஏமாந்து போனேன்.

ஆயினும் தொடரவே செய்கிறேன்,

ஆனால், நான் அவள் முகத்தை

என்றேனும் காணப் பெறுவனோ ?


பிரடரிக் லாக்கர்


33