பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாடகர்கள்

I

சங்கட கீதங்கள் சங்தோஷ கீதங்கள் பாடி
மக்கள் இதயத்தை இளக்கி
அமரர் நாடு அழைத்துவர
ஆண்டவன் தன் பாடகர்களைப் பூமிக்கு அனுப்பினான்.

II

>அனல் வீசும் ஆன்மாவுடைய அந்த இளைஞன்
தன் கையில் தங்க யாழ் தாங்கி,
கனவு லோக இன்னிசை எழுப்புகிறான்,
சோலையூடும் சுனையருகும் திரிகிறான்.

III

மீசை அரும்பிய முகத்தராகிய இவரோ,
சந்தையின் நடுவே நின்று,
ஆழ்ந்த உரத்த குரலில்,
தன்னைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்களின்
இதயங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

IV

உயர்ந்த இருண்ட கோவில்களில்
வயோதிகர் ஒருவர் பாடி நிற்கிறார்;
அவர் கையிலுள்ள கம்பீரமான
குழலின் கனக வாய்களிலிருந்து
இரக்கம் எழுந்து காற்றில் கலக்கும்.

37