பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஷ்ர்ட்டின் பாடல்

I

அவளுக்கு மானங்காக்கப் போதிய கந்தையில்லை;
ஊசி நூல் கொண்டு தைத்துத் தைத்து
விரல்கள் சோர்ந்து தேய்ந்துவிட்டன;
கண்கள் சிவந்துவிட்டன, திறக்க முடியாது.
ஆயினும், தையல் - தையல் - தையல்!
வயிற்றுப் பட்டினி - மாசேறிய மேனி!
ஷர்ட்டின் பாடலைச் சோகக் குரலில் பாடுகிறாள்.

II

சேவல் கூவிவிட்டது, ஆயினும் என்ன?
வேலை - வேலை - வேலை!
வானில் மீன்கள் வருமளவும்
வேலை - வேலை - வேலை!
பெண்ணுக்கு ஆன்மா இல்லையோ?
இதுதான் கிறிஸ்தவர் செயலோ?
இதனினும் அடிமை வாழ்வு
ஏற்றமுடைத் தன்றோ?

III

தலை சுழலும் - ஆயினும் என்ன?
வேலை - வேலை - வேலை!
கண்கள் மயங்கும் - ஆயினும் என்ன?
வேலை - வேலை வேலை!

68