பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூரியன் ஒளியில் தூக்கணங்கள் வந்து,
’வசந்த ருது, வாராயோ வெளியில்?’
என்று என்னை ஏளனம் செய்கின்றன.


தலையின் மேல் நீல வான் - பாகத் தடியில்
பசும்புல்,
மலர்களில் நறுமணம் - மறுபடியும்
துய்ப்பேனோ?
வறுமையின் துயர்களை அறியும் முன்னால்
உணவுக்கன்றி, உள்ளம் மகிழக்
குறுநடை கொண்ட சிறு பிராயத்தில் -
அப்பொழுது பெற்ற உள்ளக் கிளர்ச்சி
இப்பொழுது எனக்கு இறையேனும்
ஏற்படுமோ ?

Χ


ஐயோ, ஒருமணி நேரம் -
அதிலும் குறைந்தேனும்,
சிறுபோ தேனும் வேலையின்றி
இருக்கப் பெறுவேனோ?
காதல் செய்யவு மன்று கனவு காணவு மன்று -
மனம் விண்டு வாய்திறங்து அரற்றவே!
கொஞ்சமேனும் அழுதால்
நெஞ்சம் ஆறுதலடையும்.
ஆனால், கண்ணீர் பெருக்கலாமோ?
ஒவ்வொரு துளியும் ஊசி ஓட்டத்தைத்
தடைசெய் திடாதோ?