பக்கம்:ஆதி அத்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஆதி அத்தி மாலையே ஏற்பாடு செய்யுங்கள். பெருங்குடி மக்களுக்கும் பிரதானிகளுக்கும் அழைப்பு அனுப்புங்கள். அமைச்சர்: அவ்வாறே ஏற்பாடு செய்கிறேன். அத்தி : வேந்தே, எனக்கு இந்த அரிய வாய்ப்பை அளித்ததற்காகத் தங்களைப் போற்றுகிறேன். என்னை யாரென்று தெரியாமலே தாங்கள் இந்த வாய்ப்பை அளித்தது தங்களுக்கு நாட்டியக் கலையிலுள்ள ஆர்வத் தையே காட்டுகின்றது. தாங்கள் மட்டுமல்லாமல் அரண் மனையிலுள்ள அனைவருமே இக்கலையில் ஈடுபாடுடைய வர்கள் என்பதை நான் அறிவேன். சென்ற புதுப்புனல் விழாவின்போது தங்களுடைய அருமை மகள் நாட்டிய மாடியதைக் கண்டு களிக்கும் பெருவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அற்புதமான கலைத்திறமை வாய்ந்த அவர்களும் எனது நாட்டியத்தைக் காண வரவேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள். (பணிந்து நிற்கிருன்.) கரிகாலன் : அரண்மனையிலுள்ளோர் அனைவரும் வருவார்கள். சேர நாட்டுக் கலைஞர் ஒருவருடைய கலைத் திறமையைக் காண அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அத்தி : சோழ வேந்தே, எனது வேண்டுகோளுக்கு இணங்கியதற்காக நான் தங்களுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். (வணக்கம் செலுத்துகிருன்.) கரிகாலன் : அமைச்சரே, இந்தக் கலைஞருக்கு வேண்டிய வசதிகள் ஏற்பாடு செய்யுங்கள். நாளைச் சந்திப்போம். (கரிகாலன் ஆசனத்தைவிட்டு எழுந்திருக்கிருன். மற்றவர்களும் எழுந்திருக்கிரு.ர்கள். கரிகாலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/17&oldid=742403" இலிருந்து மீள்விக்கப்பட்டது