ஆதி அத்தி 17 ஒரு புறமாகச் செல்லுகிருன். அத்தி மீண்டும் வணங்கி விடைபெற்றுச் செல்லுகிருன், சேன பதியும் அமைச்சரும் அவனைப் பார்த்துக் கொண்டே பின் தங்குகின்ருர்கள்.) சேபைதி : சேர நாட்டிலிருந்து வந்திருக்கிற இந்த நாட்டியக் கலைஞரைப்பற்றி விவரம் ஒன்றும் தெரிந்துகொள்ளாமலேயே அவருடைய நாட்டியத்தைக் கான அரசர் இசைந்துவிட்டாரே? அமைச்சர் : ஏன், சேர நாடு என்றவுடனேயே தங்களுக்குப் பழைய நினைவுகளெல்லாம் வருகின்றனவா? சேனபதி : அந்தக் காலம் மலையேறிவிட்டது. சேரலாதன் அந்தக் காலத்திலே நமது பகைவர்களோடு சேர்ந்துகொண்டதால் அவருக்குத்தான் சிறு ைம ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவரும் உயிர் துறந்தார். இப்பொழுது நமது வேந்தரை எதிர்த்து வருபவரோ அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவரோ யாரும் இல்லை. இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமல்லவா? அமைச்சர் : இந்த நாட்டியக் கலைஞர் அத்தியின் மிடுக்கான தோற்றத்தைப் பார்த்தால் அவர் சாதாரண நாட்டியக்காரராக எனக்குத் தோன்றவில்லை. தங்க ளுடைய வீரர்கள் கலையரங்கில் ஒழுங்கு முறையைக் கவனித்துக்கொள்ள நாளே வருவார்களல்லவா? சேனாபதி : அந்த ஏற்பாட்டை நான் செய்து விடுகிறேன். அமைச்சர் : நாளை மாலை நேரத்திற்குள் நானும் அத்தியைப்பற்றி விவரம் அறிய முயல்கிறேன். பிறகு பார்த்துக்கொள்வோம். கலை எங்கிருந்து வந்தாலும் அதை ஆதரிக்க அரசர் ஆர்வங்காட்டுவதுபோல் நாமும் 2
பக்கம்:ஆதி அத்தி.pdf/18
Appearance