பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஆத்மாவின் ராகங்கள் பணத்தையும் வாங்கிக் கொண்டு ரிஜஸ்டிரேஷனை முடிச்சுடலாம்.' - - -

"நாளைக்குக் காலைவரை இங்கே தங்க முடியாதேன்னு பார்த்தேன்...'

"பரவாயில்லை, தங்கு. நாளை மத்தியானம் புறப்பட்டுப் போய்க்கலாம்' - என்றார் நண்பர். அந்த நிலையில் அவனும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. நண்பர் கூறியபடியே அம்பலக்காரரிடம் கூறி அனுப்பினான் அவன். அவரும் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். குத்தகைக் காரனும் அன்றிரவு மேலுாரிலேயே தங்கினான். -

மறுநாள் காலையில் எல்லாம் நண்பர் சொன்னபடியே நடந்தது. வீடும் நிலமும் ஒன்பதினாயிர ரூபாய்க்கு விலை திகைந்த பின் - இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒரு வாரத்துக்குள் முழுத் தொகையுடன் பத்திரம் பதிவு செய்து கொள்வதாக ராஜாராமனுடன் அக்ரிமெண்ட் செய்து கொண்டார், அம்பலக்காரர். ராஜாராமன் விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, -

'பணத்துக்கு ஒண்னும் அட்டியில்லே. சீக்கிரமா வந்து ரெஜிஸ்திரேஷனை முடிச்சுக் குடுத்துடுங்க.." என்றார் அம்பலக்காரர். அவனும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு மதுரை புறப்பட்டான். முதல் நாள் பகலில் மதுரையிலிருந்து கிளம்பும்போது மதுரத்திடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டோம் என்பது நினைவு வந்தது. அவள் நாகமங்கலத்துக்குப் போன போது சொல்லிவிட்டுப் போனது போலப் பத்தரிடம் சொல்லியாவது அவளுக்குச் சொல்லச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

மேலூர் போனாலும் போவேன் - என்று பத்தரிடமே இரண்டுங் கெட்டானாகத்தான் சொல்லியிருந்தான் அவன். 'மதுரத்துங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா தம்பீ?" என்று அவரே அவனைக் கேட்டிருக்கக் கூடியவர் தான். ஆனால், அவன் பயணத்தை உறுதிப் படுத்தாமல்