பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஆத்மாவின் ராகங்கள் முத்துக்களைப் பாதுகாப்பது போல் பற்கள் தெரியாத இங்கிதச் சிரிப்பே அவள் அலங்காரமாயிருந்து வருவதை அவன் அவ்வப்போது கவனித்திருக்கிறான். பத்திரம் பதிவாகிக் கிடைத்த தினத்தன்றும் அவர்கள் அங்கேயே சாப்பிட வேண்டுமென்று தனபாக்கியம் பிடிவாதம் செய்தாள். அதையும் அவர்கள் மறுக்க முடியவில்லை. மறுநாள் காலை பிருகதீஸ்வரனும், சுப்பையாக் கொத்த னாரும், முத்திருளப்பனும், கட்டிட அளவு வேலைகளுக்காக மாந்தோட்டத்துக்குப் போயிருந்தார்கள். ராஜாராமனுக்குக் காலையிலிருந்து இலேசான ஜூரம் அடித்துக் கொண்டிருந்தது. முந்திய முறை மாந்தோப்புக்குப் போன போது, ஒடையில் புதுத் தண்ணீரில் குளித்தது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல், நீர் கோத்துக் கொண்டு விட்டது. அவன் வாசகசாலையிலேயே படுத்துக் கொண்டிருந்தான்.

மதுரம் அவன் நெற்றியில் போடுவதற்காகச் சாம்பிராணிப்பற்று அரைத்து, கொதிக்க வைத்துக் கொண்டு வந்தாள். - . . . -

'பிருகதீஸ்வரன் இங்கே வந்து தங்கினப்புறம், நீ எங்கிட்டப் பேசறதையே விட்டாச்சு இல்லையா மதுரம்,

"பேசாட்டா என்ன? அதான் விடிஞ்சு எழுந்திருந்தா நாள் தவறாம, தெலியலேது ராமான்னு கதறிண்டிருக்கேனே; அது உங்க காதிலே விழறதோ இல்லையோ?”

- கேட்டுக் கொண்டே சுடச்சுட நெற்றியில் பற்றைப் போட வந்தவளிடமிருந்து விலகி உட்கார்ந்தான் அவன். வளையணிந்த தந்தக்கை பின் வாங்கியது.

'ஏன்? நான் போடப்ப்டாதா?"

"இப்படி வச்சுடு; நானே எடுத்துப் போட்டுக்கறேன்.

'முடியாது நீங்களே உங்க நெத்தியிலேயும், தலையிலேயும் போட்டுக்க வசதியாயிருக்காது. எனக்கே