நா. பார்த்தசாரதி 165 இப்படி வேளையிலே அம்மாவோ, மங்கம்மாவோதான்
போட்டு விடுவாங்க. பத்து வேறே கொதியாகக்
கொதிக்கிறது. சூடு தாங்காது உங்க கைக்கு..."
அதைக் கேட்டு ராஜாராமன் சிரித்தான்.
"என் கை தாங்காத சூட்டை உன் கை தாங்க முடியும் போலேருக்கு?" - .
- பதில் சொல்லமுடியாமல் இதழ்கள் பிரியாத அந்தப் புன்னகையோடு தலைகுனிந்தாள் மதுரம்.
தேசம் சுதந்திரமடையறவரை எந்தப் பெண்ணின் கையும் இந்த சரீரத்தில் படவிடுவதில்லை என்று சத்தியம் பண்ணியிருக்கேனாக்கும்...' - . . . . .
'சேவை செய்கிறவர்களைத் தடுப்பதற்கு எந்தச் சத்தியத்துக்கும் உரிமையில்லே...! . . . . . . .
- இதற்கு அவன் பதில் சொல்ல முடியவில்லை. х
மீண்டும் அவளுடைய நளினமான கோமள மென் விரல்கள் அவன் நெற்றியை அணுகியபோது அவன் தடுக்க வில்லை. வெண்ணெய் திரண்டது போன்ற அந்த மிருதுவான வளைக்கரம் நெற்றியில் பட்டபோது இதமாயிருந்தது. பற்றும் கூடக் குளிர்ந்திருப்பதுபோல் உணர்ந்தான் அவன். பற்றுப் போட்டு முடிந்ததும் சிரித்துக் கொண்டே அவனை அவள் ஒரு கேள்வி கேட்டாள்: ‘. . , s: ,
"உங்களை ஒண்னு கேக்கனும் எனக்கு..."
'கேளேன். வரங்கள் எதையும் கொடுக்கும் சக்தி இல்லாத சாதாரணத் தேசத் தொண்டன் நான்... நான்
கொடுக்க முடியாத பெரிய வரமாகப் பார்த்து நீ கேட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை மதுரம்'
அவள் புன்னகை பூத்த ாள்.