பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ஆத்மாவின் ராகங்கள் ஆசிரமத்தில் சேர்ந்து சமூக சேவகிகளாக வாழ்வு பெறத் தொடங்கினர். புதிய இந்தியாவின் தொண்டர்களை அந்த ஆசிரமம் அந்தரங்க சுத்தியோடு உருவாக்கத் தொடங்கியது. ராஜாராமனின் புகழ் நாடு எங்கும் பேசப்பட்டது. தேசியப் போராட்டங்கள் ஒய்ந்திருந்த காலத்தில் சமூக சேவையின் காந்தியச் சின்னமாக அந்த ஆசிரமம் வளரத் தொடங்கியிருந்தது. -

இந்து - முஸ்லீம் கலவரம் மூண்டு நாட்டின் வடக்கேயும் வடகிழக்கேயும் மகாத்மா ஒற்றுமைக்காக யாத்திரை மேற்கொண்டார். நவகாளி கலவரப் பகுதிகளில் மகாத்மா வின் பாதங்கள் நடந்தபோது கவலையோடு பத்திரிகைச் செய்திகளைப் படித்தான் ராஜாராமன். அந்த வருடம் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் போட்டியில் சா. கணேசனும், காமராஜும் போட்டியிட்டுக் காமராஜ் வென்றார். பிரகாசம் மந்திரிசபை கவிழ்ந்தது. பின் ஓமந்துரர் ரெட்டியார் வந்தார். சுதேசி ஆட்சியில் நன்மைகள் விளையலாயின.

1947 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முகம்மதலி ஜின்னாவும், மகாத்மா காந்தியும் கூட்டு அறிக்கை ஒன்று வெளி யிட்டார்கள். சுதந்திரத்துக்கான நன்னாள் பாரதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

1947 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் இந்தியா சுதந்திரம் அடைந்தது. கண்ணிராலும் செந்நீராலும் வளர்த்த இயக்கம் சுதந்திரப் பயனளித்தாலும், பாரத நாடு இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார்கள் உண்மைத் தேசபக்தர்கள். மதுரையிலும் சத்திய சேவாசிரமத்திலும் சுதந்திர தினத்தைப் பிரமாதமாகக் கொண்டாடினார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் வராமலிருந்து பின்வந்த ஒரு தேசியத் திருவிழாவாகவே அது காண்டாடப்பட்டது. எங்கும் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசின.