பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆத்மாவின் ராகங்கள்

தம்பி நான் போய்க் கூப்பிட்டப்பவே பரோல் லே வந்திருக்கலாம், பெரியம்மா மனசு நோகப் பண்ணிருக்க வேண்டாம். நான் திரும்பி வந்து, 'அம்மா உங்க மகன் பரோல்லே வர மாட்டேன்னிட்டாரு'ன்னு கூடச் சொல்லலே. 'ஜெயில்லே விட மாட்டேங்கிறாங்க பெரியம்மா! நாம் கொடுத்து வச்சது அவ்வளவு தான்’னு பொய் சொன்னேன். உள்ளதைச் சொல்லயிருந்தா அந்தம்மா இன்னும் ரொம்ப மனசு நொந்து போயிருக்கும். அந்தக் காந்திக்குத் தத்துக் கொடுக்கத்தான் நான் பிள்ளை பெற்றேன். எனக்குக் கொள்ளி போடப் பெறலேன்னு அன்னமாறிக்கிட்டே போய்ச் சேர்ந்தாங்க பாவம்'...' என்று பத்தரும் அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடவே, ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கண்கலங்கிப் போனான் ராஜாராமன். சிறிது நேரம் யாருடைய பேச்சுக் குரலுமற்ற தனி மெளனம் நிலவியது அங்கே. - . - - .

முத்திருளப்பன், குருசாமி, பத்தர் மூவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். அங்கிருந்த துயரச் சூழ்நிலையில் வார்த்தைகளால் சொல்லி விடைபெற அஞ்சியோ தயங்கியோ, ஜாடையால் கையசைத்து விடை பெற்றனர் அவர்கள். மீதமிருந்த மூவருக்கும் பரஸ்பரம் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து மெளனமே நீடித்தது. ராஜாராமன் இன்னும் மனம் தெளிந்து தலை நிமிரவில்லை. அவன் மனம் சரியாகி அவனாகப் பேசுகிறவரை அவனை அப்படியே விடுவது நல்லதென்று மற்றவர்கள் பேசாமலிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் அவனே தலை நிமிர்ந்து முத்திருளப்பனை விசாரித்தான்.

'உங்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம். வேலை வேற போயிருக்கும். மாசக் காணக்கிலே ஜெயில் வாசம் பண்ணிட்டீங்க, குடும்பத்தை யார் கவனிச்சுண்டாளோ, என்ன சிரமமோ?: