பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 69

"அப்பிடித்தான் நான் கவலைப்பட்டேன் ராஜா ஆனா, இதோ பக்கத்திலே இருக்காரே, இந்தப் புண்ணியவாளன் தயவுலே மாசம் தவறாமே என் குடும்பத்துக்குப் பண உதவி இடைச்சிருக்கு, 'கில்ட் கடை ரத்தினவேல் பத்தர் மாதா மாதம் பணம் கொடுத்து உபகாரம் பண்ணிக்கிட்டு இருக்கார்னு என் சம்சாரம் எழுதின கடுதாசி ஜெயிலுக்குக் கிடைச்சப்ப எத்தினி சந்தோஷமாக இருந்திச்சுத் தெரியுமா?” என்று பத்தரைக் காட்டிப் பதில் சொன்னான் முத்திருளப்பன்.

'தேசம்கிற பெரிய குடும்பத்தைக் காப்பாத்தறதுக்கு நாம கஷ்டப்படறோம். அப்ப நம்மோட சின்னக் குடும்பத்திலே எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள் எல்லாம் வரது.

'என்னுது சாதாரணம்! உன் நஷ்டம் ரொம்பப் பெரிசு ராஜா. நீ ஜெயிலுக்குப் போகாம இருந்திருந்தா உன் தாயாருக்கு இப்பிடி நேர்ந்திருக்காது...' -

'நேர்ந்தது நேர்ந்தர்ச்சு... மரணம் நாம தடுக்க முடிஞ்சதில்லை...'

'அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் போர்ஷனைக் காலி பண்ணிச் சாமான்களையெல்லாம் மேலுரர் வீட்டிலே கொண்டு போய்ப் பூட்டியாச்சுன்னு பத்தர் சொன்னார். இனிமே எங்கே தங்கப்போறே உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா கொஞ்ச நாளைக்குத் தெற்கு வாசலிலே எங்களோட வந்து தங்கலாம் ராஜா." -

'தங்கறது. ஒரு பெரிய பாடா? இங்கேயே வாசகசாலையிலே கூடத் தங்கிப்பேன். கீழே படியிறங்கினால் பத்தர் கில்ட் கடையில் குளிக்கக் கொள்ள முடியும். பத்தர் தான் மனசு வைக்கணும்...'

"பேஷாத் தங்கலாம். நீங்க கேட்டு, நான் எதுக்காவது மாட்டேன்னிருக்கேனா தம்பீடி'

"ஆனாலும், உங்க அனுமதி வேணுமில்லியா பத்தரே?"