பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆத்மாவின் ராகங்கள்

'சம்பந்தம் இருக்கிறதினாலேதான் பயப்பட வேண்டி யிருக்கு உபகாரம் பண்ண வந்த தேவதை போல் அந்தப் பெண்ணுதான் வலுவிலே வந்து உபகாரம் பண்ணிக் கிட்டிருக்கு. அதுக்கு நீங்க ஒரு தெய்வத்தைப் போல. சதா உங்களையே நெனைச்சு அது உருகிட்டிருக்கு..."

'போதும் நிறுத்தும்! ஒரு தேவடியாளுடைய உபகாரத்திலே நாம இந்தத் தேசத்தைக் காபபாதத வேண்டாம்.'

'நீங்க இந்த வார்த்தையைச் சொல்லக்கூடாது, தம்பீ மத்தவங்க சொல்லலாம்; ஆனா, நீங்க சொல்லக் கூடாது. காந்தியையும், அஹிம்சையையும், சத்தியத்தையும் நம்பறவங்க இப்பிடி உதாசீனமாப் பேசப்படாது. 'கடவுள் மனிதனைத்தான் படைச்சார்- மனிதனோ ஜாதிகளைப் படைத்து விட்டான்னு காந்தி நெனைக்கிறாரு. மனிதத்தன்மை உள்ளவங்க, மனிதத் தன்மை இல்லாதவங்கன்னு உலகத்திலேயே ரெண்டு ஜாதிதான் இருக்கு.'

அவருடைய வார்த்தைகள் அவன் இதயத்தைத் தாக்கின. இளமைத் துடிப்பிலே பேசிய பேச்சுக்காக வருந்தித் தலைகுனிந்தான் ராஜாராமன். பத்தருக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனுக்கு. அவர் காந்தியின் பேரை எடுத்ததும் அவனுக்குத் திட்ட வரவில்லை.

'நீங்க கைதான அன்னிக்கி உங்களைக் கோவில்லே பார்த்துதாம். கோவிலிலே ருந்து வெளியிலே வர்ரப்ப உங்களை விலங்கு போட்டுப் போலீஸ்காரங்க இழுத்துட்டுப் போறதையும் பார்த்துதாம். என்னை ஏதோ நகை வேலை செய்யறதுக்காகக் கூப்பிடறாப்ல கூப்பிட்டு, இத்தனையும் சொல்லி அழுதிச்சு. நீங்க கைதானதே அது சொல்லித்தான் எனக்குத் தெரியும். கீழவாசலுக்கு ஓடி வந்தேன்; பார்க்க விடமாட்டேனுட்டாங்க. அப்புறம் தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவந்தேன். அங்கேயும் பேசமுடியலை.