பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பார்ப்பனர்கள். இவர்களுக்கு என்றைக்குமே எதிலுமே தம் தம் பெண்டு பிள்ளை நலன்களே குறி! அதன் பொருட்டு ஆரியப் பார்ப்பனர்க்குத் தொண்டு செய்து வாழ்வதே தம் நெறி. இத்தகையாரே நம்மைக் கடந்த மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனருக்குக் காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்! இவர்களைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் மிகமிக எச்சரிக்கையாகவே இருத்தல் வேண்டும். நாம் கடந்த தேர்தல் காலங்களிலெல்லாம் பேராயக்கட்சியைப் பற்றிப் பேசிய விடங்களில் காமராசரைத் தவிர்த்து இந்த வீடணப் பிறங்கடைப் பக்தவத்சல சுப்பிரமணியன்களைத் தனியே பிரித்துப் பேசியதன் அகக்காரணத்தை இக்கால் அப் பேராயக் கட்சியிலுள்ளவர்களே உணருங்காலம் வந்துவிட்டது. இத்தகைய தமிழ்ப்பகைவர் அரசியலில் மட்டுமன்றிக் கல்வித்துறை, ஆட்சித்துறை, தொழில்துறை முதலிய எத்துறைகளிலும் நீக்கமறக் கலந்து நிற்கின்றனர். இவர்கள் பேச்சும், ஓரளவு எழுத்தும், பெரும்பாலும் நடையும் தமிழர்க்காகவும், தமிழ்நாட்டவர்க்காகவும் அமைவது போலவே இருக்கும். ஆனால் இவர்கள் கொள்கைப்படி தமிழர் எனப்படுவோர் 80 விழுக்காடு பார்ப்பனரும், 15 விழுக்காடு இவரைபோன்ற வீடணத் தமிழரும், 5 விழுக்காடே உண்மைத் தமிழரும் ஆவார். இவர்கள் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ போய்த் “தமிழர்களைக் கண்டு உரையாடினர்” என்றாலோ, “தமிழப் பெண்களால் நெற்றியில் பொட்டிட்டு வரவேற்கப்பட்டனர்” என்றாலோ, உண்மையாக அவர் கண்டு உரையாடியது பார்ப்பனர்களையே என்றும், அவர் நெற்றியில் பொட்டிட்டது அம்மாமிகளே என்றும் நாம் பொருள்செய்து கொள்ளுதல் வேண்டும். இராசாசியைத் தமிழ்க் குல முதியவராகவும், சங்கராச்சாரியைத் தமிழின முனிவராகவும் இவரனையர் கொண்டு பெருமை பாராட்டுவதும், பாதங்களைக் கழுவித் தண்ணிர் குடிப்பது உண்மையான தமிழன் எவனுக்கு வராத மானமிழப்புச் செயல்களாகும்.

இத்தகைய அகப்பகைவும் புறப்பகையும் உண்மைத் தமிழர்க்கு என்றும் இருப்பதால், தமிழின முன்னேற்றம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கைவராத ஒரு கவின்கலையாகவே இருந்து வருவது வருந்தற்குரியதும் உணர்ந்து திருந்தற்குரியதுமான ஓர் உண்மையாகும். தமிழர்க்குள் இன உணர்வை உண்டு பண்ண ஏதேனும் முயற்சி செய்தாலும், அல்லது தமிழ்மொழியை அதன் தாழ்ச்சி யமுக்கங்களினின்று விடுவிக்க முயன்றாலும் இவ்வகப் பகையும், புறப்பகையும் நம்மைத் தலையெடுக்க வொட்டாது