பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

241


தமிழ்மொழி, தமிழினம், தமிழ்க்கலைகள், தமிழ்ப்பண்பாடுகள், தமிழ் இலக்கியங்கள், தமிழ்நாடு என்றெல்லாம் கூறிவருகிறோம்.


இந்துமதம்,


1. தமிழர்களை முதலில் பிறவி அடிப்படையிலும், பிறகு வருண அடிப்படையிலும், அதன் பிறகு சாதி அடிப்படையிலும் வேறு வேறாகப் பிரித்து, உயர்வு தாழ்வு கற்பித்துச் சிறப்பு இழிவு கூறி, இந்த இனம் என்றென்றுமே முன்னேறாமல் செய்துவருகிறது.


2. தமிழ முன்னோர்களிடம் முன் இருந்திராத மூட நம்பிக்கைகள், அறியாமைகள், வேற்றுமைகள், இழிவுகள் போன்றவற்றை இந்துமதம் தன்னிடம் கொண்டுள்ள வேதங்கள், தர்ம சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆயின. கருவிகளின் வழியாக என்றென்றும் நிலைபெற்று இருக்குமாறு செய்து வருகிறது. பற்றாக்குறைக்கு மேற்சொன்ன கருத்துக் கருவிகளுடன் இன்றுள்ள அறிவியல் கருவிகளான வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், கல்வி, கலை, ஆட்சி, அதிகாரம் முதலியனவும் இந்துமதத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் கைகளில் கிடைத்துள்ளன.


இவற்றினின்று அறியாத தமிழர்கள் விடுபடுவதும், அறிந்த தமிழர்கள் அவர்களை விடுவிப்பதும் மிகமிகமிகக் கடினமான செயல்களாக இருக்கின்றன.


3. இந்துமதம் தனிமாந்தன் ஒருவனின் தன்னம்பிக்கையைத் தகர்த்து, அவன் தன்னறிவைக் கெடுத்து, அவன் தன்முயற்சியைத் தவிர்க்கச் செய்கிறது. இதனால் அவன் என்றென்றைக்குமே தன்னை சார்ந்தவரைப் பற்றிக்கொண்டோ, அல்லது தன் மதத்தைப் பற்றிக் கொண்டோ, அதுவும் இல்லையானால் தன் சாதியைப் பற்றிக் கொண்டோதான் வாழ வேண்டியுள்ளது. இது தனிமாந்தன் ஒருவன் அனைத்து நிலைகளிலும் முன்னேறுவதற்கு இட்டுக்கொண்ட பெரிய தடையாகும். எனவேதான் இங்குள்ள மக்களின் அனைத்து வாழ்வியல், அறிவியல், ஆட்சியியல் கூறுகளும் அனைத்து நிலைகளிலும் தாழ்ந்திருக்கின்றன.


4. இந்துமதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிப்பதில்லை. பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாகவே கருதுகிறது. பெண்களாகப் பிறந்துவிட்ட நிலையை அஃது இழிவுபடுத்துகிறது.


5. பொருளியல் நிலையில் பொதுவுடைமை, சமவுடைமைக்