பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 57

பாடு, ஓர் உரிய முறையில் செயல்படுகின்றது. வேகத்திற்கு ஏற்றவாறு உருவாகும் பொருண்மை மாற்றமானது,

என்ற சமன்பாட்டின்படி உருவாகும் அதிகமான வேகத்தினால் பொருண்மை வளர்ச்சி மேலே கூறப்பட்ட விதியால் விளக்கப்படும்.

M என்பது Mass என்ற பொருண்மை, Mo என்ற குறி, பொருள் நிலையாயுள்ளபோது இருக்கும் பொருண்மையைச் சுட்டும். V என்ற குறி பொருளின் வேகமாகும், M என்ற குறி V என்ற வேகத்தில் வேகமாகப் போகும் போது உள்ள பொருளின் பொருண்மையைக் குறிக்கும். o என்பது ஒளியின் வேகத்தைக் குறிப்பதாகும். எனவே, பொருண்மையும் சார்புடையதே.

இந்த பொருண்மைச் சார்பு தத்துவத்தின் அடிப்படையில் ஐன்ஸ்டைன் அதை ஆராய்ந்தபோது ஓர் உண்மை புலப்பட்டது.

பொருட்களின் வேகம் என்பதும் ஓர் ஆற்றல்தான். வேகம் அதிகரிப்பதால் பொருண்மையும் வேகம் பெருகி அதிகரிக்கின்றது. இதுதான் உண்மையான முடிவு என்று முடிவு கட்டுகிறார் ஐன்ஸ்டைன். அதாவது, வேகத்தின் வளர்ச்சியால் உருவாகும் பொருண்மை வளர்ச்சி உண்மையில் ஆற்றல் வளர்ச்சியே ஆகும். ஆற்றலுக்கும் பொருண்மை உண்டு.

கணித உண்மைகளின் அடிப்படையில் மேற்கண்ட விதிகளின்படி ஆராய்ந்து M-EC2 என்ற சூத்திரத்தை ஆராய்ந்து ஆற்றலுக்கும் பொருண்மைக்கும் உள்ள

ஆ-5