பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஆழ்கடலில்


அவற்றுள் ஒரு பார்வை (காம) நோயை உண்டாக்கும் பார்வையாகும்; ஒன்று அந்நோய் மருந்து = மற்றொரு பார்வையோ அந்த (காம) நோயைத் தீர்க்கும் மருந்தாகும். - என்னே வியப்பு! (உண்ணுதல் = மைபூசுதல் - உண் கண் = மையுண்ட கண் - மைபூசிய கண்.)

(மணக்குடவருரை) இவள் உண் கண்ணிலுள்ள நோக்கம் இரண்டு வகைத்து ; அவ்விருவகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்: ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.

(பரிமேலழகர் உரை) இவளுடைய புண்கணகத்ததாய நோக்கு இது பொழுது என்மேலிரண்டு நோக்காயிற்று; அவற்றுள் ஒரு நோக்கு என்கணோய் செய்யு நோக்கு. ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.

(விரிவுரை) இக் குறளைப் பற்றிய செய்தியொன்று யான் அறிந்து வைத்துள்ளேன். திருக்குறள் முழுதுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டல்லவா? டாக்டர் கிரெளல் (Dr. Graul) என்னும் ஐரோப்பியர் - செர்மனிக்காரர் என்று கருதுகிறேன் - நூலை ஒரு புரட்டுப் புரட்டிய போது, தற்செயலாய் இந்தக் குறள் அகப்பட்டதாம். அப்படியே மெய்ம்மறந்து விட்டாராம். "ஆ! இப்படியும் ஒரு கருத்துள்ள பாடல் இருக்கிறதா? ஒருத்தியின் நோக்கிலேயே இருநோக்கு; அவற்றுள் ஒன்று நோய் தருகிறது; மற்றொன்று அதற்கு மருந்தாகிறது. என்ன அழகான கருத்து! எவ்வளவு அருமையான கற்பனை! இந்நூல் முழுதும் படிக்கவேண்டும்; மொழி பெயர்த்துக் கொள்ளவும் வேண்டும்" - என்று பலவாறு பாராட்டி, அவ்வாறே படித்து, செர்மனியிலும் இலத்தீனிலும் மொழி பெயர்ப்பும் செய்தாராம். எனவே, தமிழர்களே! இனியாயினும் திருக்குறள் இன்பத்தை ஒத்துக் கொள்வீர்களா? திருக்குறள்