பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு #95 என்பது ஆழ்வாரின் திருவாக்கு. அதிகாலையில் முனிவர் கள் துயில் விட்டெழுமாப் போலே குரங்குகளும் எழுந்து பூத்த சுனைகளிலே சென்று நீராடி அங்குள்ள செவ்வி மலர் களைக் கொய்து கொண்டுபோய்த் தன் சாதிக் கேற்றவாறு ஏதேனும் ஒன்றைச் சொல்வித் துதி செய்து பணியா நிற்கும் என்கின்றார். இதனை அடியொற்றியே கம்பநாடனும் சித்திரகூடக் குரங்குகளின் செயல்களை எடுத்துக் காட்டுவான். இங்குள்ள குரங்குகள் மூப்படைந்து கண் இடுகிப் போய் வழியறியாது வருந்தும் மாதவர்க்கு அவர் செல்ல வேண்டிய அருநெறிகளைக் காட்டுகின்றன. இடுகு கண்ணினர் இடருறு மூப்பினர் ஏக கெடுகு கூனல்வால் நீட்டின உருகுறு கெஞ்சக் கடுவன் மாதவர்க்(கு) அருகெறி காட்டுப காணாய்' இடுகு இடுகிய; இடர் துன்பம்; ஏக . செல்ல; நெடுகு கூல்ை . மிக்க கூனையுடைய; மாதவர் . தவசிகள்.) என்பது கம்பன் படைத்த சொல்லோவியம். இங்கு இராமன் சீதைக்குப் பல சித்திரகூட மலைக் காட்சிகளைக் காட்டுகின்றான். இன்னும் சில மந்திகள் சிலம்பின் நூல் பஞ்சின் நூல் இவற்றை ஆராய்ந்து தெரிந்து அந்தணர்க்கு அளிக்கின்றன.26 கடுவன்கள் முனிவர்கட்கு மாங்கனிகளை அளிக்கின்றன. இங்ங்ணம் குறிஞ்சி நிலக் காட்சிகள் வழிவழியாகப் புதிய புதிய கற்பனைப் போக்குகளுடன் 25. அயோ.சித்திர-30. 26. டிெ-32. 27. டிெ.33.