பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 ஆழ்வார்களின் ஆரா அமுது இலக்கியங்களில் புலவர்களால் காட்டப் பெற்று அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. குறிஞ்சி நிலக் காட்சிகளைச் இத்திரிப்பதில் கபிலர் வல்லவர். அவர்தம் சங்கப் பாடல் களில் இக்காட்சிகளைக் கண்டு மகிழலாம். தத்துவ ஞானியர் இந்த அசித்துக் காட்சிகளிலும் ஆழங்கால் படுகின்றனர். பேயாழ்வார் காட்டுபவை: தாட்சி.1 பேயாழ்வார் காட்டும் யானையோ ஆதிமூலமே!’ என்று ஓலமிட்டழைத்த கசேந்திரன் மரபு வழி வந்தது போலும். அது புரியும் வழி பாட்டுச் செயலை ஒரு சமத்காரம் பொலியப் பேசுகின்றார் ஆழ்வார். வழிபாட்டுக்குச் செல்லும் அடியார்கள் வாய் கொப்பளித்துக் கைகால்களை நீரால் துய்மை செய்து கொண்டு மலர்களை எடுத்துப் போவது வழக்கமாகும். திருமலையிலுள்ள ஆண்யானையொன்று இந்நெறியை மேற். கொள்ளுகின்றது. இக்காட்சியினை ஆழ்வார், புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து அருவி உகுமதத்தால் கால்கழுவிக் கையால்-மிகுமதத்தேன் விண்ட மலர்கொண்டு விறல்வேங் கடவனையே கண்டு வணங்கும் களிறு." (புகு - வாயில் புகும்; வாய்பூசுதல் - கொப்பளித்தல்: மிகுமதம் - அதிக மதம்; விறல்." மிடுக்கு; களிறு - ஆண் யானைi என்ற பாடலால் காட்டுவர். கன்னத்திலிருந்தும் மத்தகத்தி விருந்தும் பெருகி யொழுகும் மத நீரால் வாய் கொப்பளிக் கின்றது யானை. அருவிபோல் கால்வரை பெருகி வழியும் மத நீரினால் கால் கழுவுகின்றது. இங்ங்ணம் திருமலை யிலுள்ள ஐயறிவு விலங்குக்கும் தன்னை வழிபடும் ஞானத்தைத் தரக்கூடியவன் திருமலையப்பன் என்பது ஆழ்வார் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். 28. மூன். திருவந். 70