பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்திசாரர் #59 தமது வாழ்க்கையில் அதுகாறும் செய்து வந்த கண்டனங் களும் சண்டப் பிரசண்ட வாதங்களும் நாச வேலைகளும் அவர் செய்து காட்டிய அந்த விபரீதமான நந்தவன கைங்கரியம் போன்றவைதானா? - என்ற ஐயம் பளிச் சென்று தோன்றுகின்றது. பேயாழ்வாருடன் மனம் விட்டுப் பேசப் பேச மனக்குழப்பமும் ஒருவாறு தெளிகின்றது. உண்டு என்பதை இல்லை என்றும், இல்லை" என்பதை *உண்டு என்றும் சித்தாந்தம் செய்வதற்குத் தாய் மொழியைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், மனங்கசிந்து இறைவனைத் தோத்திரம் செய்யப் பயன்படுத்துவது நல்லதென்று உணர்கின்றார். சித்திகளில் புத்தியைச் செலுத்திப் பிறரையும் மயக்கித் தம்மையும் மயக்கிக் கொள்வதைவிட மேலான இலட்சியம் உண்டென்பது அவருக்குப் புலனாகின்றது. பட்டமரம் தழைப்பது போலத் தழைக்கத் தொடங்குகின்றது அவர்தம் நம்பிக்கை. பேயாழ்வாரைச் சித்தர் வணங்குகின்றார். அவரும் இவரைச் சீடராக ஏற்றுக் கொள்ளுகின்றார்; பக்திசாரர் என்ற புதிய திருநாமமும் சூட்டுகின்றார். பஞ்ச சம்ஸ் காரம் தொடங்கித் தத்துவோபதேசமும் செய்தருளு .கின்றார். சாக்கியம் கற்றோம் சமண்கற்றோம்; சங்கரனார் ஆக்கிய ஆகமதுரல் ஆய்ந்தோம்-பாக்கியத்தால் செங்கட் கரியானைச் சேர்ந்தோம் தீதிலமே எங்கட் கரியதொன் றில்." என்று எண்ணித் திருமழிசைக்கு வந்து யோக நிலையில் நின்று திருமகன் கேள்வனைத் தியானித்துக் கொண்டிருந்த தாக ஒரு வரலாறு உண்டு. இன்னொரு வரலாற்றுப்படி பேயாழ்வாரின் உபதேசம் பெற்ற நிலையில், அவர் அவதரித்த மயிலாப்பூருக்கு வருகின்றார் பக்திசாரர். வசதியான ஓரிடத்தில் அமர்ந்து 6. தனிப்பாடல்