பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஆழ்வார்களின் ஆரா அமுது


கூடிய உள்ளத்தைக் கவர்ந்து அந்த மகா சக்தி அருள் செய்து கொண்டிருப்பதை அவர்தம் உள்மனம் தெளிவாக அறிந்து கொண்டது. ஆகவே, அவர் உள்ளம் அரங்கனின் அடித்தாமரைகட்கு வண்டாகி யாழ் கொண்டு இசை பாடிக் கொண்டிருந்தது வியப்பாகுமோ? இல்லை; இல்லை. அக்காலச் சமூக நிலைப்படி இவர் மனம் தாழ்வுணர்ச்சி யால் பீடிக்கப் பெற்றிருந்தது. உபய காவேரியின் நடுவிலுள்ள அரங்கன் திருக்கோயிலில் அடியிடுவதற்கு இவர் மனம் துணியவில்லை. ஆகவே, காவிரியின் தென் திருக்கரையில் திருமுகத்துறைக்கெதிரில் யாழும் கையுமாக நின்று கொண்டு நம் பெருமாளைத் திசை நோக்கித் தொழுவதை அன்றாட வழக்கமாகவே கொண்டிருந்தார். பெரிய பெருமாள் விஷயமாக அநேக திவ்விய கீர்த்தனங்கள் இவர்தம் திருவாயினின்றும் கண்டமும் கருவியும் ஒக்கப் புறப்பட்டவண்ணம் இருந்தன. இந்த இசையமுதம் கேட்பவர் செவியையும் மனத்தையும் குளிரச் செய்தது. எம்பெருமானின் திருவுள்ளமும் உகப்பில் ஆழ்ந்தது. கின்னரர், கிம்புருடர், கந்தருவர் முதலானோர் இவர்தம் இசை விருந்தைக் கண்டு வியப்புக் கடலில் ஆழ்ந்து போயினர். பேரன்பர்களே, இந்தப் பாணர் தந்த விருந்து இன்னொரு பாணனின் வரலாற்றையும் நினைவுகூரக் செய்கின்றது. திருக்குறுங்குடியை அடுத்துள்ள மகேந்திர 5. பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, ஒரு சிறிய ஊர். மலையை யொட்டிய பகுதியாதலின் இவ்வூர் நல்ல குளிர் சோலைகள் நிரம்பியுள்ளன. இரவும் பகலும் ஈன்தேன் முரல் வண் டெல்லாம் குரவின. பூவே தான்மண நாறும் குறுங்குடி (பெரி. திரு. 9.6:4) என்பர் திருமங்கையாழ்வார்.